மேலும் அறிய
Advertisement
மதுரை ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - ஆதிதிராவிடர் குடியிருப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து
"ஏற்கனவே அரசு அதிகாரிகளின் பதில் மனு மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது நிதிக்கான திட்டம் இல்லை என்றால் எப்படி?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கண்மாய் பட்டியைச் சேர்ந்த அழகு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. சுமார் 25 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் இடிந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தருமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு கடந்த முறைமுறை விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 1988ஆம் ஆண்டில் வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு அவர்கள் தான் வீட்டுக்கான பராமரிப்பையோ, புனரமைப்பையோ மேற்கொள்ள வேண்டும். மீண்டும் வீடு கட்டித்தருவதற்கென திட்டமோ, நிதியோ இல்லை" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "ஏற்கனவே அரசு அதிகாரிகளின் பதில் மனு மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது நிதிக்கான திட்டம் இல்லை என்றால் எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர், வேறு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரமுடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கான பதிலை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, மேலூரில் வீடு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது தொடர்பான திட்டத்தின் விபரத்தை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட ஆழ்வார்புரத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
மதுரை செனாய் நகரைச் சேர்ந்த செய்யதுபாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சி 35வது வார்டு ஆழ்வார்புரம் கடந்த 1978 முதல் 1982 வரை பொது வார்டாக இருந்தது. தற்போது வார்டு மறுவரையறையில் 30வது வார்டாக பெண்கள் (ஆதிதிராவிடர்) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆண்கள் எனவே இருந்துள்ளது. இதனால், பிற பொது பிரிவினருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, 30வது வார்டை முறையாக மறுவரையறை செய்யவும், அனைத்து தரப்பினரும் போட்டியிடும் வகையில் பொதுபிரிவினருக்கானதாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion