மேலும் அறிய

தென் மாவட்டத்தில் ஓபிஎஸூக்கு ஆதரவு இருக்கா..? என்ன சொல்கிறார் ராஜன் செல்லப்பா...!

ஒற்றை தலைமை விவகாரம் குறித்து இனி ஓபிஎஸ் தரப்புடன்  பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா

மதுரை திருப்பரங்குன்றம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பரங்குன்றம்  எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேசும்போது, ஒரு வலிமையான திறமையான தலைமை உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உள்ளது. தி.மு.க.,விற்கு சாதகமாக  சிந்துபாடுபவர்கள் அ.தி.மு.க., தலைமை பதவியை ஏற்க தகுதியற்றவர்கள். ஓ.பி.எஸ் மீது நாங்கள் பற்றும் அன்பும் கொண்டவர்கள். நேற்று ஓ.பி எஸ் மதுரை முதல் தேனி வரையில் மேற்கொண்ட பயணம் வெற்றிப் பயணமாக கருத முடியாது. ஓ.பி.எஸ் சுய நலத்துடன்  செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் தனது தொகுதி தவிர மற்ற எந்த கட்சியினருக்கும் தேர்தல் பிரச்சாரம்  செய்யவில்லை இல்லை. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸூக்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது.

தென் மாவட்டத்தில் ஓபிஎஸூக்கு ஆதரவு இருக்கா..? என்ன சொல்கிறார் ராஜன் செல்லப்பா...!
 
ஜெயலலிதா ஓ.பி.எஸ்-ஐ உண்மை தொண்டன் என்று பாராட்டியதாக கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா மேடையில் பாராட்டினால் சில காரணம் இருக்கும். ஓ.பி.எஸ்.,ஐ கட்சியை விட்டு சிலகாலம் ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா என்னிடம் எடப்பாடி பழனிசாமியை அடையாளம் காட்டினார். நான் அதை பொது வெளியில்  கூறியது இல்லை. அவரின் நம்பிக்கைக்குரியவராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அதிமுகவின்  95% கட்சித் தொண்டர்கள், தலைமை குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள்  இ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஓ.பி.எஸ், ஜானகி அம்மா போன்று எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுக்க வெண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இ.பி எஸ் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார். ஓ.பி எஸ் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை  மட்டுமே பெற்றுள்ளார்.

தென் மாவட்டத்தில் ஓபிஎஸூக்கு ஆதரவு இருக்கா..? என்ன சொல்கிறார் ராஜன் செல்லப்பா...!
பன்னீர்செல்வம் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி இருக்கிறார். பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் பொதுக் குழு கூட்டதில் எந்த அவமரியாதையும் செய்யப்படவில்லை. பொதுக் குழுவை நடக்கக்கூடாது என்று நினைப்பவர் எப்படி கட்சித் தலைவராக வர முடியும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் நீதிமன்றம் செல்லலாம். ஆனால் தலைவராக வர வேண்டுமென நினைப்பவர் எப்படி செல்வார்.  தென்மாவட்டத்தில்  ஓ.பி எஸ் மட்டும் அதிமுகவின் தலைவர் இல்லை.  திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பெரிய புல்லான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இருக்கின்றனர். என்வென்று தெரியாமல் பல கோப்பில் கையெழுத்து போட்டதாக சொல்லும்  ஓ.பி. எஸ் எப்படி  முதல்வராக இருந்தார். எப்படி கட்சியின் தலைவராக இருக்க முடியும்.  வினை விதைத்தவன் வினை அறுப்பான், கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான். அவர் எடுத்த ஆயுதம் அவரை வீழ்த்தி உள்ளது.

தென் மாவட்டத்தில் ஓபிஎஸூக்கு ஆதரவு இருக்கா..? என்ன சொல்கிறார் ராஜன் செல்லப்பா...!
 
யார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்? 
 
கட்சியை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முடியாதவர் எப்படி ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்.  ஒருங்கிணைப்பு, தகுதி, திறமையற்றவராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து  இனி ஓ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை இல்லை. அது கட்சியின் வேகத்துக்கு வேகத்தடையாக நிற்கிறது. பேசினாலும் கட்சியில் பதவி பெறும் விஷயங்களை பற்றிதான் பேசுவார்கள். வருகின்ற ஆண்டுகளில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தென் மாவட்டங்களில் ஜாதி, மத மற்ற கட்சியாக அதிமுக இருக்கிறது. சிலர் வேண்டுமென்றே சாதி அடிப்படையில் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget