(Source: Poll of Polls)
5 குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு - குற்றவாளிக்கு 5 ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
9 வயது மற்றும் அதற்கு குறைவான 4 குழந்தைகளை கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் உறுதியாகிறது.
5 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றாவளிக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கிய 5 ஆயுள் தண்டனையை உறுதிசெய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து அவர்களை மிரட்டியும், துன்புறுத்தியும் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலில் இருந்த காயத்தை அறிந்து விசாரித்ததில் நாராயணன் பாலியல் தொல்லைகொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாராயணன் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு நாராயணன் 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி நாராயணன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவில் 9 வயது மற்றும் அதற்கு குறைவான 4 குழந்தைகளை கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு செய்தது விசாரணையில் உறுதியாகிறது.
எனவே இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவான 5 ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
மற்றொரு வழக்கு
கல்வி உதவித் தொகையை திரும்ப பெறுவது குறித்து சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம்
கல்வி சான்றுகள் விற்பனை பொருட்கள் இல்லை எனவே சான்றுகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் உள்ள VPM நர்சிங் கல்லூரியில் பி எஸ் சி நர்சிங் படித்துள்ளார் சூழ்நிலையின் காரணமாக கல்லூரியில் இருந்து இடைநீற்றலாகி வெளியேறி விடுகிறார்.
இந்நிலையில் கல்லூரியில் சேர்க்கையின் போது கொடுத்த மாற்று சான்று 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை திரும்பி கேட்க போது கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்து விட்டது. தனது பள்ளி படிப்பு சான்றுகளை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவி தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்து அதற்கான கல்வி உதவித்தொகை பெற்றுள்ளார். இடைநிற்றலால் பெறப்பட்ட உதவித் தொகையை திரும்ப கல்லூரிக்கு கொடுக்க வேண்டும் இதை தவறியதால் அவருக்கான சான்று ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாணவி கல்வி உதவித் தொகை பெற்று பின்பு இடைநிற்றல் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட உதவித் தொகையை திரும்ப பெற வேண்டும் என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை மாணவிக்கு எதிராக மேற்கொள்ளலாம். அதனை விடுத்து அவருடைய மதிப்பெண் பட்டியலை கொடுக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல .
கல்வி சான்றுகள் விற்பனைக்கு அல்ல எனவே மாணவிக்கான சான்றை உடனடியாக திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்