மேலும் அறிய

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!

மீனவர்களை கற்களால் எறிந்தும், காலி மது பாட்டில்களை கொண்டு வீசி அடிப்பதும் சில நேரங்களில் ரப்பர் கொண்டு பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை காயப்படுத்தி அடித்து விரட்டி மிரட்டி வருகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 300க்கும் குறைவான மீன்பிடி விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட அதிநவீன ரோந்து கப்பல்களில் ரோந்து வந்த  இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மண்டபம்  மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை  கொண்டு தாக்கி உள்ளனர். இதில் அந்தோணி,ஜெபஸ்டின், சார்லஸ், ரத்தினம், அந்தோணி பிரசாத் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  அந்தோனி பிரசாத் என்பவரின் படகில் ஓட்டுநராக சென்ற செல்வம் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது  வீட்டில் உள்ளார்.

 

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!

மேலும், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இப்பகுதியில் மீன் பிடித்தால் கைது செய்வோம் என எச்சரித்ததால் அப்போது மீன்பிடித்த மீனவர்கள் அச்சத்துடன் இரவோடு இரவாகவும் காலையிலும்  கரை திரும்பினர். சில மீனவர்கள் இன்று காலை மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது மீண்டும்  இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி கற்கள் மட்டும் பாட்டில்களை கொண்டு தாக்கியதால் மீனவர்கள் மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பி வருகின்றனர். மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய  சம்பவம் இப்பகுதி மீனவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!
இந்த தாக்குதல் சம்பவம் இன்று நேற்று மட்டும் அல்ல கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம்,பாம்பன், மண்டபம் தங்கச்சிமடம், ஆகிய பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை கற்களால் எறிந்தும், காலி மது பாட்டில்களை கொண்டு வீசி அடிப்பதும் சில நேரங்களில் ரப்பர் கொண்டு பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை காயப்படுத்தி அடித்து விரட்டி மிரட்டி வருகின்றனர்.  இந்த தொடர் தாக்குதலால் இந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!

 

தாங்கள் சந்திக்கும் இன்னல் குறித்து கூறும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை  தொடர்கிறது கடந்த ஆட்சியிலும் சரி, தற்போது நடந்துவரும் ஆட்சியிலும் சரி தொடர்ந்து,  மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி அண்டை நாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் இது தொடர்கதையாகவே நடந்து வருகிறது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

 

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!
நம் எதிரி நாடு என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் கூட  இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் துப்பாக்கியால் சுடுவதில்லை. ஆனால் நட்பு நாடான இலங்கை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது என தொடர்ச்சியாக செய்து வருகிறது. 1974 ஆம் ஆண்டில் கச்சத்தீவை அன்றைய ஆட்சியாளர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்திருந்தாலும்,   கச்சத்தீவு கடற்பரப்பில் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதியில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையின் இன்றைய தாக்குதலில் இந்திய மீனவரின் மண்டை உடைப்பு...!

ஆனால் இந்திய எல்லையை தாண்டி தங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிட்டதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது, சுட்டுப் படுகொலை செய்வது என்கிற இலங்கையின் அட்டூழியங்கள் தொடருகின்றன. ஒரு காலத்தில் நம் வசம் இருந்த கச்சத்தீவு இலங்கையின் கைக்கு மாறியதால்,  இன்று கசப்பாகி  நமது தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு  இந்திய தரப்பிலிருந்து கடுமையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக மீனவர்களின் கண்ணீர் கதை தொடர்கதையாகத்தான் இருக்கும்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget