பழனி முருகன் கோயிலில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன் சாமி தரிசனம்
பழனி முருகன் கோயிலில் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ததற்காக வருகை தந்தார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜன் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ததற்காக வருகை தந்தார். அப்போது கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்து ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்று உச்சிக்கால பூஜையில் தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியில் விரைவில் நடக்கவுள்ள யாகத்திற்காக புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை அழைப்பதற்கான அழைப்புகளை கொடுத்து வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவன் தியாகராஜன், இலங்கை நாட்டில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளிக்க முடியாது எனவும், அதேபோல் இலங்கையில் பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டார் மேலும் தான் சுவாமி தரசினம் செய்யவே வந்துள்ளேன் என கூறி சென்றார்.
பழனியில் உள்ள துணிக்கடையில், காவலாளியை தாக்கி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடைகளை திருடிச்சென்றதாக எழுந்துள்ள புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே தனியார் துணிக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த துணிக்கடையில் இரவு காவலில் இருந்த தேவேந்திரன் என்பவரை நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் தாக்கி கட்டிப்போட்டு, கடையில் இருந்த புதிய துணிகளை லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றதாகவும், காவலாளி தேவேந்திரனையும் லாரியில் கடத்திச்சென்று பொள்ளாச்சி அருகே இறங்கிவிட்டுச் சென்றதாகவும் பழனி நகர் காவல்நிலையத்தில் கடையின் உரிமையாளர் ஜோதிகணேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
Ruturaj Gaikwad: 7 சிக்ஸர்களுடன் ருத்ர தாண்டவமாடிய ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்த சாதனைகள்..!
மேலும், காவலாளி தேவேந்திரனை கடத்திச்சென்ற கும்பல் பொள்ளாச்சியருகே செல்போனை பிடுங்கிவிட்டு இறக்கி விட்டதாகவும், அங்கிருந்து பழனி வந்து உரிமையாளரிடம் தகவல் கொடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருட்டு நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், துணிக்கடை உரிமையாளர் ஜோதிகணேஷ் தங்களிடம் வாங்கிய பொருட்களுக்கு பணம் தராமல் இருப்பதாக வெளியூர் வியாபாரிகள் பலரும் கடை உரிமையாளர் ஜோதிகணேஷ் மீது பழனி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே ஜோதி கணேஷிற்கு பொருட்கள் வழங்கிய வெளியூர் வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரேனும் செய்தார்களா? என்ற கோணத்தில் பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்