மேலும் அறிய
Advertisement
சிறப்பு ரயில்கள் ரெகுலர் ரயில்களாக மாற்றம் - ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் நன்றி
"முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும். சிறப்பு வண்டிகள் அனைத்தும் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் எனது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி''
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”ரயில்வே வாரியத்தின் நவம்பர் 12 ஆம் தேதி கடிதத்தில் அனைத்து சிறப்பு ரயில்களையும் கால அட்டவணைப்படி அதிலுள்ள வண்டி எண்களுடன் ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கிட ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே 295 சிறப்பு ரயில்களின் வண்டி எண்களை கால அட்டவணை படியான எண்களுடன் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வண்டிகளில் பறிக்கப்பட்ட முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும். வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் முன்பதிவுடன் இயங்கும். எந்த வண்டிகளில் பொது பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனவோ அந்த வண்டிகளில் பொது பெட்டிகள் உடன் வண்டிகள் இயங்கும். புதிய எண்களுடன் இயங்கும் வண்டிகளில் முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணமும் அதிக கட்டணத்துக்கு மீதி திருப்பி தருவதோ கிடையாது. எந்த தேதியில் இருந்து இந்த வண்டிகள் ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். சர்வரில் உரிய மாற்றங்கள் செய்தபின் அமுலுக்கு வரும். அமுலுக்கு வரும் தேதியிலிருந்து சலுகைகளும் திரும்ப கிடைக்கும்.
முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் எனவும் , சிறப்பு வண்டிகள் அனைத்தும் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் என இரயில்வே வாரியம் அறிவிப்பு
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 13, 2021
எனது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.
இரயில்வே அமைச்சருக்கு நன்றி. @AshwiniVaishnaw #Railway #Madurai pic.twitter.com/AewewkRWYp
அக்டோபர் 22 ஆம் தேதி நான் ரயில்வே அமைச்சரை சந்தித்து முதியோர் சலுகை உட்பட 53 வகை சலுகைகளையும் மீண்டும் வழங்கிட வலியுறுத்தினேன். அவர் ரயில் வண்டிகளை சிறப்பு வண்டிகளாக இயக்குவதை மாற்றி ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கப்படும்போது சலுகைகள் மீண்டும் வழங்கப்பட நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.
சிறப்பு வண்டியிலேயே சலுகைகள் வழங்க நான் வலியுறுத்தினேன். அல்லது ரெகுலர் வண்டிகள் ஆக சிறப்பு வண்டிகளை இயக்க விரைந்து முடிவெடுக்க நான் வலியுறுத்தினேன். அந்த அடிப்படையில் இப்போது அனைத்து சிறப்பு வண்டிகளையும் ரெகுலர் வண்டிகள் ஆக கால அட்டவணையில் உள்ள எண்களுடன் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வழக்கமான கட்டணங்களுடன் சலுகைகளுடன் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இதனை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion