Sivagangai: "வண்டி, வண்டி ரயிலு வண்டி" - சிவகங்கை அருகே ரயில் பெட்டி வடிவில் கிளாஸ் ரூம்.. அசத்தும் அரசுப் பள்ளி
ரயில் வண்டிய பார்த்ததே இல்லை ரயிலில் சென்றதும் இல்லை மாணவ மாணவியர்களின் ஏக்கத்தை கட்டிடத்தில் வரைபடமாக வரைந்து நிறைவேற்றிய சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.
பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் சின்னஞ் சிறு மாணவ, மாணவிகள் மத்தியில் அவர்களை வசீகரிக்கும் வகையிலும் அவர்களின் கற்பனைத் திறனை வலுப்படுத்தும் விதமாக பள்ளியின் சுவர்களில் ரயில் வண்டி போல வர்ணம் பூசப்பட்டு அசத்தியுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசனூர் நடுநிலைப் பள்ளி
சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
- Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!
அதன்படி, அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.15.94 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2023-24-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்களில் இரயில் பெட்டியை போன்று வர்ணம் பூசப்பட்டுள்ள பணிகள் மற்றும் மாணாக்கர்களிடையே கற்றல் திறன் ஆகியன குறித்தும், ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், அரசனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தலைவர் செல்வராணி அய்யப்பன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மகிழ்ச்சி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி