மேலும் அறிய
வெற்றி, வெற்றி என வடிவேலு போல் பேசிய முதல்வர் - கிண்டலடித்த செல்லூர் ராஜூ
வெற்றி, வெற்றி என நகைச்சுவை நடிகர் வடிவேலு சொல்வதுபோல டங்ஸ்டன் கனிம சுரங்க பாராட்டு விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

செல்லூர் ராஜூ
Source : whats app
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் கனிம சுரங்கம் குறித்து எதிர்த்து பேசியதால்தான் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு முடிவு கிடைத்தது. அதற்கு அதிமுகதான் முழு காரணம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை முத்துப்பட்டி 73 வது வார்டு பகுதியில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எங்களைப் பொறுத்தவரை சாதாரண ஏழை எளிய மக்கள் பயனுள்ள வகையில் பட்ஜெட் அமைய வேண்டும். வக்பு வாரிய மசோதா வரும்போது எடப்பாடி மறுபடிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். இப்படி ஒரு முதலமைச்சரை பெற்றதற்கு நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேசுவதெல்லாம் பொய்யாக பேசுகிறார். நீதிமன்றமே இந்த அரசை கண்டித்து இருக்கிறது. அரசாங்கம், காவல்துறை சரியில்லை சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பது போய், யார் அந்த கார் பேசப்பட்டு வருகிறது. திமுக காரர்கள் காவல்துறையிடம் பேசி காரில் வந்தவர்கள் திமுக காரர்கள் இல்லை என்று சொல்லுங்கள் என்று பேசுகிறார்கள். திமுக கொடியை மட்டும் கட்டியுள்ளார்கள். எனவே அவர்கள் திமுகவினர் இல்லை என்று போலீசார் சொல்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் கனிமத்திற்கு எதிராக குரல் எழுப்பி பேசினார்
நடப்பதை பூதாகரமாக மாற்று பேசுகிறார்கள் என்று முதல்வர் பேசுகிறார். எங்கள் ஆட்சியை மக்கள் குறை சொன்னார்களா? தூத்துக்குடி சம்பவம், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்தது முதல்வர் மு.க.ஸ்டாலின். மீத்தேன் திட்டம், புரிந்துணர்வு கையொப்பம் போட்டது மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பதுபோல் முதல்வர் பேசுகிறார். சோசியல் மீடியாவில் குரல் கொடுப்பவர்கள் தற்போது ஆளையே காணோம், மக்களே தற்போது சோசியல் மீடியாவில் எடுத்து சொல்கிறார்கள். மக்கள் இந்த திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சியைப் வெறுக்கிறார்கள். டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரும் வரை 9 மாதம் திமுக அரசு தூங்கியது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டங்ஸ்டன் கனிமத்திற்கு எதிராக குரல் எழுப்பி பேசினார். ஆனால் வெற்றி வெற்றி இன்று வடிவேல் சொல்வது போல மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதுபோக மத்திய சுரங்கத் துறை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாமலை நாடகம் நடத்துகிறார். டங்ஸ்டன் கனிமத் திட்டம் வந்ததற்கு மத்திய மாநில அரசுகள் தான் முழு காரணம் மக்களை இந்த அளவிற்கு போராடம் வைத்தது தேவையா? பதட்டம் தேவையா? எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட பின்பு தான் டங்க்சன் கனிம சுரங்கத்திற்கு முடிவு கிடைத்தது. இதற்கு முழுமையான காரணம் அதிமுக தான்.
திமுக ஆட்சிக்கு வந்தது இருந்து மதக் கலவரம், ஜாதி கலவரம் நடக்கிறது
இன்னும் ஒரு வருஷம் இந்த ஆட்சி இருக்கிறது, 200 சீட், 200 சீட் என கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தது போல முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஊடக பெருமக்களை திமுக பயமுறுத்துகிறது, FIR வெளியானதால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுபோன்று வழக்கு கொடுக்க மாட்டார்கள். அதனால்தான் எஃப் ஐ ஆர் வெளியாகி உள்ளது. கஞ்சா கடத்துபவன், திருடுபவன், மக்களை ஏமாற்றுபவன்தான் திமுக கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அதிமுக ஆட்சிதான் அடுத்த மலரும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். தமிழ்நாடு அண்மையில் அமைதி பூங்காவாக இருந்தது இந்து, முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அனைவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். திமுக ஆட்சிக்கு வந்தது இருந்து மதக் கலவரம் ஜாதி கலவரம் நடக்கிறது. வேங்கைவயல் பிரச்சனையை திருமாவளவன் ஏற்றுக்கொள்ளவில்லை கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது வரை வாய் திறந்தார்களா? நவாஸ் கனியை இஸ்லாமிய அமைப்பாளர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. திருப்பரங்குன்றத்தில் நவாஸ் கனி பிரியாணி சாப்பிடுகிறார், கந்தரும் சிக்கந்தரும் ஒன்றாக இருக்கிறார்கள், திருப்பரங்குன்றம் மலையை சொல்லுவார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுக ஆட்சி 2026 இல் மலரும் அப்போது ஐந்து வயது சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாதுகாக்கப்படுவார்கள் பாலியல் வன்கொடுமை இருக்காது” என்று பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion