மேலும் அறிய

மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு செல்லூர் ராஜூ நேரில் ஆறுதல்

எலக்ட்ரீசியன் பணிக்காக சென்று விஷவாயு தாக்கி உயிர் நீத்த சரவணகுமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  பழங்காநத்தம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதால் மோட்டார் பழுது நீக்குவதற்காக மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் சிவக்குமார் மற்றும் கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன், மாடக்குளத்தை சேர்ந்த சரவணன்  ஆகிய மூன்று பேரும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பணியாளர்களும் தொட்டியில் தவறி விழுந்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூவரையும் சடலமாக மீட்டனர்.


மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு செல்லூர் ராஜூ நேரில் ஆறுதல்

நேற்று இரவு சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது தொடர்பாக மூன்று நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட இரு ஒப்பந்த பணியாளர்கள்  உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  அவருடைய தொகுதியான மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிவகுமார் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவரது மனைவி மகன் மகள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து எலக்ட்ரீசியன் பணிக்காக சென்று விஷவாயு தாக்கி உயிர் நீத்த சரவணகுமாரின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

இதை  படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget