மேலும் அறிய

விஜயின் அரசியல் வருகையை பார்த்து யாரும் பயப்படமாட்டார்கள் - சீமான்

நான் வந்து மிகுந்த தெளிவான கொள்கை உடையவன், என் பயணம் என் கால்களை நம்பி தான், உங்களுடைய கால்களை நம்பி பயணிக்க முடியாது - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் பதில்

பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள். அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள் விஜய்க்கு சீமான் பதிலளித்தார்.
 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்...”
 

விஜயோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு

இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல அது வேற, இது வேற. இது என் நாடு என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். விஜய் மற்றும் எங்களது இரு வேறு கொள்கையும் ஒன்றாக இல்லை மற்றபடி நாங்கள் சொன்னதை சொல்கிறார். மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம் அதனை கொள்கையாக எடுத்துக் கொள்வது ஏற்க முடியாது.
 

விஜயை மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதா?

 
அதனைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். என்னைப் போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும். ஒரு பிரச்னைக்கு வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.
 

பாஜக பாசிசம் திராவிட மாடல் எதிரி என்ற விஜயின் பேச்சு குறித்த கேள்விக்கு

பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள் அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள். நாங்கள் அதனை திருட்டு மாடல் தீஞ்சு போன மாடல் என்கிறோம். 
 

விஜய் உதயநிதி  ஸ்டாலின் என தேர்தல் களம் மாறுமா? என்ற கேள்விக்கு

 
நாங்கள் எல்லாம் குறுக்க கோடு போட்டு ஆடிக் கொண்டிருப்போமா என்றார்.
 

யார் விஜயை பார்த்து பயப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு? 

யாரும் பயப்பட மாட்டார்கள். என்னை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் இந்திய திராவிட என்ற கோட்பாட்டிற்கு எதிரானவன் நான் இது இரண்டுமே என் இனத்திற்கு எதிரானது.  திராவிடம் என்பது இந்தியத்தின் கூட்டாளி, இதனை நான் சொல்லவில்லை. முத்துராமலிங்கத் தேவர் ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான், ஒரு நாள் கட்டிப்பிடித்து கைகுலுக்கு சங்கமிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். நான் தமிழன் என்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்கள் கோட்பாட்டு அளவில் நாங்கள் இந்திய அரசியலில் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள். ஏனென்றால் திராவிடம்  எங்களுடன் தமிழ் பேசிக்கொண்டு என் மொழியை அழிக்கும் தமிழர் , தமிழர் உரிமை என பேசிக்கொண்டு எங்களுடைய உரிமையை அழிக்கும் சிதைக்கும். மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்தது யார் திணித்தது யார் காங்கிரஸ் பாஜக தான். இவைகளை எதிர்ப்பும் இல்லாமல்  காலூன்ற அனுமதித்தது திமுக தான்” என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget