மேலும் அறிய
Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !
ஏற்கனவே இருந்த வீரியத்தை போன்று மீண்டும் செயல்படுவேன் மக்களுக்கு எடுத்துரைக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் சவுக்கு மீடியா தயங்காது - மதுரையில் பேட்டி
![Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் ! Savukku sankar Despite going to prison, the vigor of speaking up does not diminish Savukku Shankar action interview in Madurai Savukku sankar : “எப்போதும் வீரியம் குறையாது” - சலங்கை கட்டிய சவுக்கு சங்கர் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/25/9689d98760b30cef325e70b4360143851727277922152184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சவுக்கு சங்கர்
Source : whats app
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல விமர்சானை பார்த்து பழகி வரோ வளர்ந்தவரோ அல்ல தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான் முதலமைச்சர்.
சிறையில் இருந்து வெளி வந்த யூடியூபர் சவுக்கு சங்கர்
மதுரை மத்திய சிறையில் இருந்து யூடியுபர் சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியில் வந்தார். அப்போது அங்குவந்த பாஜகவினர் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுக்கு சங்கர்...,” எனக்கு 3 இடங்களில் எலும்புகள் உடைத்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் காவல்துறையினர் என்னை கஸ்டிடி எடுக்கும்போதும் திமுக அரசிற்கு எதிராக எதுவும் பேசக்கூடாது, திமுக அரசுக்கு ஆதரவாக பேச வேண்டும் நிபந்தனையாக கூறினார்கள். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக உங்களை விடுவிப்போம் அதை மீறினால் நாங்கள் ஒவ்வொரு வருடத்திற்கு உங்களை சிறையிலிருந்து விடமாட்டோம் என கடுமையாக நெருக்கடி கொடுத்தார்கள். நான் உண்மைகளை பேசுவது என்று அஞ்ச மாட்டேன் என பதில் அளித்தேன்.
தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி
அதன் காரணமாக இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் என்னை கைது செய்தார்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் அல்ல ; விமர்சனங்களை பார்த்து பழகியவரோ வளர்ந்தவரோ அல்ல தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடி தான் மு.க.ஸ்டாலின். பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் இறந்தார் கருணையின் அடிப்படையில் பதவி வழங்குவார்கள். அது போலத்தான் திமுக தலைவரும் தற்போது முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார். உண்மையை சவுக்கு மீடியா 8 மாதங்களாக வெளிகொண்டுவந்தததன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, அலுவலகம் சீலிடப்பட்டது வீடுகளும் சீலிடப்பட்டுள்ளது எனது தாயாரின் பென்ஷனும் முடக்கப்பட்டுள்ளது.
உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
நாட்டில் நடக்கும் எந்தவித உண்மையும் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக முதல்வரும் உதயநிதி ஸ்டாலினும் மிக கவனமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் அனைவருக்கும் தெரியும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மாற்ற வேண்டும். என பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. கடந்த 2023 டிசம்பரில் தமிழக டிஜிபி சங்கர் ஜி வால் தமிழகத்தில் சட்டவிரோதமாக மெத்தனால் சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. அதை தடுக்க வேண்டும் அதை தடுக்கவில்லை என்றால் மரக்காணத்தில் ஏற்பட்டதை போன்று மீண்டும் நடைபெறும். என தமிழக உள்துறை அமைச்சருக்கு சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு டிசம்பரில் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தின் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் என்றால் 66 உயிர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயிர் போயிருக்காது இதுபோன்ற உண்மைகள் மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக சவுக்கு மீடியா முடக்கப்பட்டது.
ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது
நான்கு நாட்களுக்கு முன்பாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சார் வீதம் பாஸ்போர்ட் வழக்கு குறித்து பத்திரிகையாளர் எழுதியதற்கு அவரை கைது செய்துள்ளனர். சவுத் மீடியாவில் பணியாற்றிய நபர்கள் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்படும் என மிரட்டி இருக்கிறார்கள். இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். ஐந்து மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன். எனது அலுவலகம் முடக்கப்பட்டு இருக்கிறது ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நம்பி இருந்தோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர்
எனது கையை கோவை சிறையில் வைத்து உடைத்தார்கள் தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது துளியும் இல்லை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தன்னை பத்திரிக்கையாளர் என கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சுதந்திரத்தையும் குரல் வளையையும் நெருக்குவது நிறுத்துவதில் முன்னணியில் இருக்கிறார். தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் இல்லாமல் ஒரு அவல நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்துள்ள திராவிட மாடல் என்ற சாவக்கேடு மக்கள் எப்போது முடியும் என காத்திருக்கிறார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
தமிழ்நாடு
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion