மேலும் அறிய

மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?

”கேசம்பட்டியில் உள்ள பெரியருவி நீர்தேக்கத்தை மேம்படுத்தி தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்தினால் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னையே இருக்காது” என கூறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரியருவி நீர்தேக்கம் உள்ளது. இந்த அணை 1962-ல் முன்னாள் அமைச்சர்  கக்கன் முயற்சியால் கட்டப்பட்டது. இதன் மூலம்  கேசம்பட்டி, பட்டூர், சேக்கிப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மூலமாக 650 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?
பல ஆண்டுகள் போதிய மழை இல்லாததால் இந்த நீர்த்தேக்கத்தால் உரிய பலன் கிடைக்கவில்லை. இந்த நீர்த்தேக்க உள் வாயில் நிறைய ஆக்கிரமிப்பு உள்ளது. அதேபோல நீர்த் தேக்கத்திலிருந்து நீர் வெளியேறி வரும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு சூழ்ந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த நீர்த்தேக்கத்திற்கு பெரியாறு பாசன கால்வாய் மூலமாக நீர் நிரப்பி ஆண்டுதோறும் பயன்பெறச் செய்தால் இப்பகுதி மக்கள் தொடர்ந்து விவசாயம் செய்து இழந்த விவசாயத்தை மீட்க ஏதுவாக அமையும் என்கின்றனர்.

மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?
இந்த அணை கட்டும் முன்னர் வரை நீர்த்தேக்க பகுதியில் சிறிய மழை பெய்தாலும் கூட உடனே, இப்பகுதி கண்மாய்கள் நிரப்பியதாக கூறப்படுகிறது. அணை கட்டிய பிறகு ஒரு சில முறைதான் இங்கே தண்ணீர் வந்துள்ளது. எனவே இந்த அணைக்கு ஆண்டுதோறும் நீர் நிரப்பக்கூடிய ஏற்பாடு செய்யவேண்டும்” என்கின்றனர்.
 
மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?
 
இது குறித்து சமூக ஆர்வலர் செல்வராஜ் நம்மிடம், “கருங்காலகுடியை சுற்றியுள்ள பல கிராமங்கள் ஊற்று நீரைக்குடித்துத்தான் உயிர் வாழ்கின்றனர். கொட்டாம்பட்டியை சுற்றிய 16 ஊராட்சிகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. போதிய மழை இல்லாத காரணத்தாலும், நீர் பாசனங்களும் இல்லை என்பதால் வறட்சி எங்களை வாட்டியெடுத்து வருகிறது. 25 வருடங்களுக்கு மேல் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சியில் வரவிருந்த ஆற்றுப் பாசன கால்வாயானது, எங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தடுக்கப்பட்டது.
 
மதுரை : கக்கன் முயற்சியால் கட்டப்பட்ட அணை உயிர்பெறுமா ?
தொடர்ந்து நீர்வரத்து என்பது இல்லாமல் போக கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரம் தண்ணீருக்கு கஷ்டப்பட்டு வருகிறது. மலை அடிவாரங்களில் கிடைக்கும் ஊற்று நீரை மணிக்கணக்காக சேகரித்து பயன்படுத்துகின்றனர். அதுவும் கிடைக்காத கிராம மக்களின் நிலை இன்னும் ஒருபடி மேலேதான். இப்பகுதியில் அரசு சார்பாக தண்ணீருக்காக போடப்படும் போர்கள் திட்டமிட்டே ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத இடமாக பார்த்து போடப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல்வேறு சிக்கலால் இப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. எனவே சூரப்பட்டி, பள்ளப்பட்டி, கம்பூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 70 கிராமங்களும் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசன கால்வாய் அமைக்கவேண்டும் அல்லது இராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கவேண்டும். அதே போல் கேசம்பட்டியில் உள்ள பெரியருவி நீர்தேக்கத்தை மேம்படுத்தி தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்தினால் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னையே இருக்காது” என கேட்டுக்கொண்டார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget