மேலும் அறிய
Advertisement
Madurai: திமுக அரசின் பணிகளை ஆளுநர் பாராட்டவில்லை - ஆர்.பி.உதயகுமார்
திருப்புகழ் ஆய்வு அறிக்கை என்ன ஆனது ?இதுகுறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று எடப்பாடியார் கூறியதற்கு முதலமைச்சர் வாய் திறக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
மதுரை கே.கேநகர் பகுதியில் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.அப்போது...,” கடந்த 10 ஆண்டுகளில் தானே புயல், நீலம் புயல், மடிபுயல், வர்தா புயல், ஓக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் ஆகிய அனுபவங்களை நாங்கள் கையாண்டு உள்ளோம். இதே 2023 ஆம் ஆண்டு மிக்ஸாம் புயல் ஏற்பட்டபோது ஒரு சொட்டு தண்ணீர் கூட ரோட்டில் தேங்காது என்று அமைச்சர்கள் பேச்சை நம்பி மக்கள் சென்றனர் ஆனால் சென்னை, தூத்துக்குடி ,நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது ,அதில் எடப்பாடியார் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
மூன்று கட்டங்களாக நாங்கள் பிரிப்போம்
இன்றைக்கு திருப்புகழ் ஐஏஎஸ் அவர்களின் ஆய்வு அறிக்கை என்ன ஆனது? இதுகுறித்த வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று எடப்பாடினார் கூறுகிறார். ஆனால் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. அறிக்கை செயல்பாடு குறித்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் தான் விவரம் தெரியும். பொதுவாக இது போன்ற பேரிடர் காலங்களில் வெள்ளம் வருவதற்கு முன், வெள்ளம் இருக்கும் போதும், வெள்ளம் வடிந்த பின்பு என்று மூன்று கட்டங்களாக நாங்கள் பிரிப்போம் இந்த மூணு அணுகுமுறை அரசு கையாளவில்லையா? என்று கேள்வி எழும்புகிறது. சென்னையில் வாகனங்கள் எல்லாம் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டது. மேம்பாலங்களில் ஆயிரம் ரூபாய் அபதாரம் வித்தாலும் பரவாயில்லை, காரை பாதுகாத்தாலே போதும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசு வெத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது இது மக்களை காப்பாற்ற முடியாது.
பேச்சில் சலிப்புத் தன்மை உள்ளது
அதேபோல் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ,கழிப்பறை போன்றவற்றை எந்த நிலையில் உள்ளது என்பதை தெரியவில்லை? ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகிறார் காருக்கும், தண்ணீருக்கும் பகை என்று நியாயப்படுத்துகிறார். அவர் பேச்சில் சலிப்புத் தன்மை உள்ளது. கவர்னர் பாராட்டியதாக செய்திகள் கூறுகிறது. ஆனால் கவர்னர் நம்பிக்கை உள்ளது என்றுதான் கூறினார். தவிர எந்த செயல்பாட்டை பாராட்டினார் என்று கூறவில்லை. இதே சுனாமி ஏற்பட்டபோது புரட்சித்தலைவி அம்மாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டியது தற்போது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதேபோல சில தினங்களில் கவர்னரும் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று கூறிவிடுவார். விமானத்தில் வந்த பயணிகளுக்கு சிறப்பு பேருந்து ஏற்படுத்தி கொடுத்தோம் என்று பாராட்டுகிறார்கள், ஆனால் இன்றைக்கு தாழ்வான பகுதிகளில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சிக்கி உள்ளது. அதை மீட்க எந்த நடவடிக்கை இல்லை. பாராட்டு என்று கூறி ஒரு மெத்தன போக்கு உருவாக்க கூடாது. வெள்ளம் முடிந்து பின்பு கூட பயிர் காப்பீடு போன்றவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பம் அதிரடியாக உள்ளது. இதை நாம் எதிர்கொள்ள மிக விரைவாக அதிரடியாக செயல்பட வேண்டும், வடகிழக்கு பருவங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் பாதுகாப்பாக இதை நாம் எதிர்கொள்ள முடியும்" எனக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion