மேலும் அறிய
அம்மாவை பற்றி அண்ணாமலை புகழ்வது உள்நோக்கம் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து மென்மை போக்கை கடைபிடித்தால் எடப்பாடியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் எடப்பாடி கே.பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் கோட்டைமேடு கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்திகள் சந்திப்பில் கூறியதாவது: 520 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மெத்தன போக்கை திமுக அரசு காட்டி வந்தது அதை மக்கள் பொறுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அம்மாவின்திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணித்திட்டம் என வரலாற்று திட்டங்களை எல்லாம் ரத்து செய்தனர். அதனையும் மக்கள் பொறுத்துக் கொண்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்னைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப் பெரியாறு ஆகும். இந்த முல்லை பெரியாரின் புரட்சித்தலைவி அம்மா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணையை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
முல்லைப் பெரியாரை காக்க வேண்டும்
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளா அரசு அணைக்கட்ட முயற்சிக்கிறது. திமுக அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை, திமுக அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது. ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு கேரளா அரசு அனுப்பி வைத்தது அதை பரிசீலனை செய்து11 கொண்ட குழுவை அமைத்துள்ளனர். முல்லைப் பெரியாரின் உரிமை காக்க வேண்டிய அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது. இது தொடர்ந்து எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல சிலந்தி ஆற்றில் கேரளா அரசு எடுத்த முயற்சிக்கு தோலுரித்துக் காட்டி முதல் எச்சரிக்கையை எடப்பாடியார் எழப்பி முதல் கண்டனத்தை எழுப்பினார். தற்போது முல்லைப் பெரியாரில் உரிமையை நிலைநாட்ட கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர், அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார்.
போராட்டம் நடத்தப்படும்
இங்கு உயிர்பறி போகிறது ஆனால் உரிமையை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா ?தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா? ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த திரை மறைவு வேலையை தேர்தலுக்காக திமுக அரசு மறைப்பதின் அவசியம் என்ன? முல்லை பெரியார் உரிமை பிரச்னையில் அரசு தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க., அரசு கடைபிடித்தால் எடப்பாடியாரை அழைத்து வந்து மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த நாங்கள் ஒரு நாளும் அஞ்ச மாட்டோம் எந்த சூழ்நிலையும் நாங்கள் முல்லை பெரியாரைக் காக்க போராடுவோம். புரட்சித்தலைவி அம்மா இந்துத்துவா கொள்கை கடைப்பிடித்தார் அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார் ,இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடியார் உயிரை கொடுத்து தியாகவேள்வியில் தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வருகிறார் .
அண்ணாமலைக்கு உள்நோக்கம்
அண்ணாமலை அதிமுக உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவைபற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை வாஜ்பாய், அத்வானி, வீரசாகர் ஆகியோரின் சாதனையை சொல்லி பாராட்டி ஏன் கெளரவிக்கவில்லை. மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த அம்மாவை அண்ணாமலை புகழ்வது அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement