மேலும் அறிய
Advertisement
Ration Rice : ரேஷன் அரிசி கடத்தல் : "விக்ரம்" படத்தில் போல கடத்தல்காரர்களை பிடிப்போம் - ராதாகிருஷ்ணன் உறுதி
விக்ரம் படத்தில் குற்றவாளிகளை பிடிப்பது போன்று ரேஷன் அரிசி கடத்தலுக்குகாரணமான முக்கிய குற்றவாளிகளை பிடிப்பதே அரசின் நோக்கம் என்று கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை வந்த கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி கூட்டுறவு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது, "இந்த துறையை பொறுத்த வரைக்கும் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் நலன் இரண்டு கண்களாக உள்ளது. தமிழக முதலமைச்சர் தரமான உணவுப் பொருட்கள் நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
மதுரையில் 1300க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளது இந்த கடைகளை புதுப்பிக்க வேண்டும். இதனால் மக்கள் விரும்பும் இடங்களாக மாற வேண்டும் என்பதற்காக, குறிப்பாக மாவட்டங்களில் 75 கடைகளில் முதல் கட்டமாக புதுப்பிக்க வேண்டும் என முயற்சிகள் செயல்படுத்தி வருகிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மதுரையில் உள்ள 174 உள்ளது.
இதனை கூட்டு உயர்வு நாட்டு உயர்வு என்ற கொள்கையின் அடிப்படையில் அதனை கடன் கொடுக்கும் மையமாக மட்டுமல்லாது பொருளாதார வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்துள்ளார் 5 கிலோ கேஸ் சிலிண்டர் கூட விநியோகம் செய்யும் திட்டத்தினை வருகிற 6-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
முதலமைச்சர் தமிழகத்தில் 20 இடங்களில் 238 கோடி மதிப்பீட்டில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் கிடங்குகள் கட்ட முடிவுகள் செய்யப்பட்டு தற்போது மதுரை தோப்பூரிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆண்டி தோறும் சுமார் 6 முதல் 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை தார்ப்பாய்களால் மூடும் நிலையினை மாற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் உத்தரவின் பேரில் முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் பாதுகாக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதனை ஒன்றை மாதங்களில் முடிக்கப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்பட்டு வரும் ஒரு ஆண்டுகளில் மழையில் நனையும் போன்ற நிலை இருக்கக் கூடாது என்பதற்காக செயல்பட்டு வருகிறோம்.
பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் குளறுபடி கருவிழி பதிவு குறித்த கேள்விக்கு.
ஒன்றிய அரசுகளும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படும் திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். தற்போது மக்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வருவதற்கு பருப்பு விலையை விட நியாய விலை கடைகளுக்கு வரும் ஆட்டோவின் விலை அதிகரித்துள்ளது. இதனை சரி செய்யும் விதமாக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நகர்ப்புறங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் இருக்கும் இடங்களில் கூடுதலாக ரேஷன் கடை உருவாக்குதல் முயற்சியினைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் வார்டுக்கு ஒரு ரேஷன் கடை என உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். அதுபோன்று மக்கள் வந்து திரும்பி செல்லாத வகையில் முயற்சிகள் செய்து வருகிறோம்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான மூலதனமான கடை ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாதது குறித்து கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், விக்ரம் படத்தில் போதை கடத்தலுக்கு முக்கிய குற்றவாளியாக இருக்கும் சந்தனத்தை பிடிப்பது போன்று ரேஷன் அரிசி கடத்தலுக்கு முக்கிய குற்றவாளிகளை பிடிப்பதே அரசு நோக்கம். கடந்த மாதங்களில் அரிசி கடைகளில் ஈடுபட்டவர்களை 13008 வழக்கு பதிவுகள் செய்து 13 ஆயிரத்து 113 பேரை கைது செய்து இதில் 113 பேரை குண்டர் சட்டம் மற்றும் அதற்கு இணையான சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மாடக்குளம் ஸ்ரீ கபாலீஸ்வரி கோயில் 508 விளக்கு பூஜை - திரளான பெண்கள் பங்கேற்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion