மேலும் அறிய
Advertisement
அரசு நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "நிபந்தனையுடனாவது ஜாமின் வழங்க வேண்டும். மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியில், அதிகாரிகள் துணையோடு பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டு இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் அன்ன பிரகாஷ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "நிபந்தனையுடனாவது ஜாமின் வழங்க வேண்டும். மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர், அவரது உடல் நிலை கவனத்தில் கொள்ளப்படும் என குறிப்பிட்டார். இதை தொடர்ந்து நீதிபதி, வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
போக்சோ வழக்கில் கைதான தச்சுத்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கடந்த 2018ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்த சுந்தரம் என்ற தச்சுத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion