மேலும் அறிய

Train Update | சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

1. வண்டி எண் 06001 தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் 2022 ஜனவரி 12   புதன்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து இரவு 09.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 13 வியாழக்கிழமை திருநெல்வேலியிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
Train Update | சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
2. வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி 13 வியாழக்கிழமை அன்று மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14 அன்று மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
 

Train Update | சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
3. வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 திங்கட்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
 

Train Update | சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
4. வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில்  வண்டி எண் 06039 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 17 அன்று காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 மின்சாரம் வழங்கும் பெட்டிகள் இணைக்கப்படும்.
 

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget