மேலும் அறிய

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு

தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் “தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கான வேஷ்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாராட்டத் தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருள்கள் அருகாமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.

சில சமயங்களில், அந்தக் கடைகள் தரமான பொருள்களை வழங்குவது கிடையாது.  இதற்கு மாற்றாக அவற்றை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை  எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருள்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்தக் கோரிக்கை நியாயமானது, நன்மை அளிப்பது. இது தொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை

PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!

நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மீண்டும் தூத்துக்குடி கடலுக்குள் சீறிபாய்ந்த விசைப்படகுகள்..!

HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!
PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!
நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மீண்டும் தூத்துக்குடி கடலுக்குள் சீறிபாய்ந்த விசைப்படகுகள்..!
நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மீண்டும் தூத்துக்குடி கடலுக்குள் சீறிபாய்ந்த விசைப்படகுகள்..!
HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
USA Vs IRE, T20 Wolrdcup: அச்சச்சோ..! உலகக் கோப்பை லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் - சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா

Jos Buttler Baby: ஜோஸ் பட்லருக்கு ஆண் குழந்தை..பெயர் என்ன தெரியுமா?

USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!

Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Embed widget