மேலும் அறிய

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

வனப்பகுதியில் தேன் எடுக்க சென்றபோது யானையின் தந்தத்தை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கோடிக்கு பேரம் பேசிய போது வனத்துறையினர் பிடித்தனர்.

பழனி அடுத்த பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமு , மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராமு தேன் சேகரிப்பிற்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதிக்கு ராமு சென்ற போது அடர்ந்த வனப்பகுதிக்குள் இறந்த யானை ஒன்று கிடைத்துள்ளது. யானை இறந்ததை வனத்துறையிடம் தெரிவிக்க வேண்டிய ராமு அதனை மறைத்து பணத்திற்கு ஆசைப்பட்டு யானையின் தந்தத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார்.

West Bengal Train Accident: மேற்கு வங்கம் - விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து - பயணிகள் நிலை என்ன?

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

ஒரு மாதமாக யானை தந்தத்தை யாரிடம் விற்பது என்பது தெரியாமல் ராமு வீட்டில் வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. ராமுவிடம்  யானை தந்தம்  இருப்பதை கூறி  அதனை விற்பனை செய்ய உதவுமாறு சோமசுந்தரத்திடம் உதவி கேட்டுள்ளார்.  சோமசுந்தரம் யானை தந்தத்தை விற்பனை செய்ய மேலும் தனக்குத் தெரிந்த வயலூரை சேர்ந்த கணேசன் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். பல இடங்களில் யானைத் தந்தத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

Vijay Sethupathi: இங்க சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்: அந்த பாரம் என்னோட குழந்தைக்கு வேணாம் - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் யானை தந்தத்தை விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றத் தடுப்பு பிரிவு தனிபிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்து கொண்ட வனத்துறையினர் கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு  யானை தந்தம் வாங்குபவர்கள் போல நடித்து பேரம் பேசியுள்ளனர். அப்போது ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு தந்தங்களை தருவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் மாவட்ட உதவி வன அலுவலர்கள் சக்திவேல் மற்றும் நர்மதா ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் யானை தந்தத்துடன் கன்னிவாடிக்கு கணேசன் மற்றும் சோமசுந்தரத்தை வரவலைத்த வனத்துறையினர் யானை தந்தத்துடன் கைது செய்தனர். வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யானை தந்தம் பழனி வனப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த ராமு யானை தந்தத்தை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது,

பழனி வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை கடத்திய நபர்கள் கைது! ஒரு கோடிக்கு பேரம் பேசியது அம்பலம்!

பழனிக்கு வந்த வனத்துறையினர் ராமுவை கைது செய்து யானை தந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய வனப்பகுதிக்குள் ராமுவை அழைத்துச் சென்றனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை இறந்து கிடந்ததற்கான தடயங்களும் எலும்புக்கூடுகளும் கிடந்தது. ராமு கூறியது உண்மை என்பதை அறிந்த வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர், இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போனை பறிமுதல்  செய்து வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
Embed widget