மேலும் அறிய

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

கொடைக்கானலில் பெய்த கனமழை எதிரொலி வெள்ளப்பெருக்கின் இடையில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.

சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த அக்டோர்பர் 28ம் தேதி தொடங்கியது. அதேபோல் தென் மேற்கு பருவமழையின் போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

தென்மேற்கு பருவமழை, அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர்நிலை நிறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

இத்தகைய சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுமார் 20 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பையிலிருந்து மூங்கில் காட்டிற்கு, மக்கள் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இச்சூழலில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில், மக்கள் ஆற்றை கடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும்போதெல்லாம், இதே போன்ற நிலை ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தால் தான், ஆற்றில் வெள்ளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்காலிக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget