மேலும் அறிய
பசும்பொன் தேவர் குருபூஜை: இரத்தம் ரத்தத்தை அழைக்கிறது! இபிஎஸ்-க்கு நன்றி செலுத்த உதயகுமார் வியப்பான ஏற்பாடு!
மதுரையில் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் ரத்த கையெழுத்து இட்டனர்.

ஆர்.பி.உதயகுமார்
Source : whatsapp
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வருகை தரும் இபிஎஸ்ஐ வரவேற்கும் விதமாக "இரத்தம் ரத்ததை அழைக்கிறது" என ரத்தத்தில் கையெழுத்திட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
தேவர் ஜெயந்தி விழாவில் இபிஎஸ் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இந்நிகழ்வுக்காக வருகை தரும் அவரை வரவேற்பு அளிப்பது குறித்து கழக அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ்.எஸ் சரவணன், மாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது
இந்த நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்...,” பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அரசு அரசு விழாவாக கொண்டாட புரட்சித்தலைவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு புரட்சிதலைவி அம்மா திருவுரு சிலை அமைத்தார். அதேபோல பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் 13.5 எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா 63 வது குருபூஜை இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஈபிஎஸ் டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இன்றைக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இதன் மூலம் இபிஎஸ் புகழுக்கு புகழ் சேர்ந்து உள்ளார்.
ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் ரத்த கையெழுத்து இட்டனர்.
இன்றைக்கு எடப்பாடியாருக்கு நாம் நன்றி கடனை செலுத்து வகையில, இரத்தம் ரத்ததை அழைக்கிறது என்ற தலைப்பில் ரத்த கையெழுத்துயிட்டு அவருக்கு நன்றி கடன் செலுத்தி வரவேற்கிறோம். 30 ம் தேதி காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடியார் மதுரைக்கு வருகிறார். அப்போது பெண்கள் பூர்ண கும்ப மரியாதை வைத்து வரவேற்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதனை தொடர்ந்து பத்தாயிரம் இளைஞர்கள் சீருடை அணிந்து வரவேற்கிறார்கள். அடுத்த ஆண்டு 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை விழாவில் முதலமைச்சராக இபிஎஸ் இருப்பார்” என கூறினார். இதனைத் தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் ரத்த கையெழுத்து இட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















