மேலும் அறிய

’என் சேரில் வந்து உட்காருங்க’ - ப.சிதம்பரத்தை கடுப்பேற்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி !

சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கும் நிர்வாகி இடையே கடுமையான வாக்குவாதம், நடந்தது உட்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடியில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிகழ்வுகளில் சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசி வருகின்றனர். மானாமதுரை அருகே வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

’என் சேரில் வந்து உட்காருங்க’ - ப.சிதம்பரத்தை கடுப்பேற்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி !
அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு 'கட்சியில் வளர்ச்சி அடையவில்லை,. முறையாக கட்சி கூட்டத்திற்கு அழைப்பு யாருக்கும் வருவதில்லை' என பல குற்றச்சாட்டுகளை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் 'நிறுத்துங்கள்' என வலியுறுத்தினார். வேலு தொடர்ந்து பேசியதால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ‌. ப.சிதம்பரம் பேசுவதை குறுக்கிடவே வாக்குவாதம் கடுமையானது. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்த நிர்வாகியிடம், ”நீங்கள் போய் மேடையில் அமருங்கள். ‌ நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்து ‌கொள்கிறேன்‌‌” என்று கூறினார்.

’என் சேரில் வந்து உட்காருங்க’ - ப.சிதம்பரத்தை கடுப்பேற்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி !
கோபம் அடைந்த கட்சி நிர்வாகி, சிறிது நேரத்தில் தான் அமர்ந்திருந்த  நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர் பாண்டிவேலு  கூறுகையில் 'நான் பல வருடமாக கட்சியில் இருக்கிறேன் கட்சிக்காக உழைத்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி மானாமதுரையில் முறையாக செயல்படவில்லை.

’என் சேரில் வந்து உட்காருங்க’ - ப.சிதம்பரத்தை கடுப்பேற்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி !
இது குறித்து கட்சிக்கூட்டத்தில் நான் பேசியபோது,  தலைவரிடம் எனது  ஆதங்கத்தை சற்று கோபத்துடன் வெளிப்படுத்தினேன்.  இரண்டு பேருக்கும் இடையில் சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு நிர்வாகிகள் வந்து சமாதானம் செய்தார்கள். வேற ஒன்றும் இல்லை' என்று தெரிவித்தார்.
 
தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
Embed widget