மேலும் அறிய

Madurai Tanishq ; நிஷாந்தை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு !

குற்றவாளி நிஷாந்தை டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான யூடியுபர் நிஷாந்தை டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு.

கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ 900கிராம் நகைகள் முழுமையாக மீட்கப்பட்டது

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலையில் 11 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் நேற்று தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை தனிப்படை காவல்துறையினர் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து நிஷாந்தை மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நிஷாந்திடம் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. நகைகள் கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறித்தும் நகைகளை பதுக்கி வைத்த இடங்கள் குறித்தும் விசாரணை நடத்திய நிலையில், மதுரை முனியாண்டிபுரம் கோபாலிபுரம் மலைப்பகுதியில் பதுக்கிவைத்திருந்த 6கிலோ 400 கிராம் நகை மூடையினை காவல்துறையினர் மீட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் நகைகள் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 11 கிலோ 900 கிராம் நகைகள் மொத்தமாக முழுமையாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்படுகிறது.

நிஷாந்திடம் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை

தொடர்ந்து காவல்துறையினர் நிஷாந்திடம் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பின்னர் இன்று அதிகாலை காவல் நிலையத்திலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பெரியார் பேருந்து நிலையம் அருகே காவல்துறை கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் உள்ள அளவீடு பதிவு செய்யும் யூனிட்டில் (MCU) நிஷாந்திற்கு சோதனை நடத்தப்பட்டு கை ரேகைகள், கருவிழி, உடல்தோற்றம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பின்னர் மதுரை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லட்சுமி பிரியா முன்பு ஆஜர் படுத்தப்பட்டான். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிபதி முன்பாக காண்பித்தனர். பின்னர் குற்றவாளி நிஷாந்தை டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு நிஷாந்த் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
உணவக கேஷியரிடம் ரூ.21 லட்சம் மோசடி !! மிரட்டிய தம்பதி - சென்னையில் பரபரப்பு
" யார் முந்தி செல்வது " கல்லூரி மாணவருக்கு நடுரோட்டில் விழுந்த அரிவாள் வெட்டு
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
செக்காணூரணி மரணம்: சிபிசிஐடி பிடியில் 6 காவலர்கள்; 10 மணி நேர துருவல்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
மதுரை தனிஷ்க் கொள்ளை: முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது; 11.7 கிலோ நகைகள் முழுமையாக மீட்பு!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Tamilnadu Power Cut: தமிழகத்தில் இன்று (17-11-2026) கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட பெரிய லிஸ்ட்
தமிழகத்தில் இன்று (17-11-2026) கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட பெரிய லிஸ்ட்
Embed widget