மேலும் அறிய

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

பழனி முருகன் கோயில் சென்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பழனி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிப்பது தெரிந்த கோயில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பக்தரை உள்ளே அனுமதித்தனர். 

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தனிவழியில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

இதுகுறித்து ரோப்கார், மின்இழுவையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நேற்று போடிநாயக்கனூரில் இருந்து கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், தான் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்றும், தன்னை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டபோது, உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை வரிசையில் வருமாறும், மேலும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நடக்கமுடியாமல் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருப்புசாமி தெரிவித்தார். 

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

மேலும் அவர் தெரிவித்ததாவது:- போடிநாயக்கனூரில் இருந்து பழனி கோயிலுக்கு இன்று காலை வந்ததாகவும், முதலில் மின்இழுவை ரயில் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து தான் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டியும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரோப்கார் நிலையத்திற்கு சென்றபோது அங்கும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் சுமார் 2மடிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

தொடர்ந்து பாதிக்கப்பட்ட  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது குறித்து அறிந்த திருக்கோயில் ரோப்கார் பணியாளர்கள் மாற்றுத்திறனாளி பக்தரை ரோப்கார் நிலையத்திற்குள் அனுமதித்தனர். மாற்று திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு வழி என்று பலகைகள் மட்டும் ஆங்காங்கே வைத்துள்ள திருக்கோயில் நிர்வாகம், மாற்றுத்திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் விடுதலை: அடுத்த கட்ட நடவடிக்கை தீவிரம்!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
நெல்லை கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம்: கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Madurai HC ; மலைகளை விட மதுக்கடைகள் முக்கியமா? - நீதிபதிகள் கேள்வி !
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!
Sivagangai : அக்டோபர்-10 காரைக்குடியில் 10,000+ தனியார்துறை வேலைவாய்ப்புகள்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget