மேலும் அறிய

பழனி கோவில் பஞ்சாமிர்த விற்பனை சாதனை: 200 நாட்களில் ரூ.41 கோடி! பக்தர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.


பழனி கோவில் பஞ்சாமிர்த விற்பனை சாதனை: 200 நாட்களில் ரூ.41 கோடி! பக்தர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

குறிப்பாக பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவலவீதி, பேருந்துநிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதற்கான தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதார முறையில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு டின், பெட் ஜார்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. 470 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டின் ரூ.45, பெட் ஜார் ரூ.40, 200 கிராம் எடையுள்ள பெட் ஜார் ரூ. 20 விலைகளில் விற்கப்படுகிறது.

பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அதிக அளவில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த விற்பனையை அதிகப்படுத்தியது. இதற்கென 15 நிரந்தர பஞ்சாமிர்த விற்பனை மையங்கள், ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் அமைக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


பழனி கோவில் பஞ்சாமிர்த விற்பனை சாதனை: 200 நாட்களில் ரூ.41 கோடி! பக்தர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

இந்தாண்டு பழனி கோவிலில் ஜூலை 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆண்டு பசலி என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி, தற்போது நடைபெறுவது 1435-ஆவது பசலி ஆண்டு ஆகும். இந்த நிலையில், பழனி கோவில் சாா்பில் பஞ்சாமிா்த விற்பனை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த 1432 -ஆவது பசலியில் ரூ. 31.17 கோடிக்கும், 1433-ஆவது பசலியில் ரூ. 36.56 கோடிக்கும், 1434-ஆவது பசலியில் ரூ. 36.14 கோடிக்கும் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 1435-ஆவது பசலியில் கடந்த 200 நாள்களில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget