மேலும் அறிய
Advertisement
பழனி : தைப்பூசத்துக்கு பின் முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி .. ரூபாய் 1 கோடிக்கு மேல் வருவாய்..
தைப்பூசம் திருவிழா பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை முதல் நாள் எண்ணிக்கையில் 1 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 வருவாயாக கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 12-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் இன்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனினும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை உதவி ஆணையர் கலைவாணன், மதுரை நகை சரிபார்ப்பு அலுவலர் பொன்சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 75 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. அதன்படி தங்கம் 267 கிராம், வெள்ளி 11¼ கிலோ (11,251 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நாளை (செவ்வாய்கிழமை) மற்றும் 27-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion