மேலும் அறிய
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. 3-வது முறையாக முதல் பரிசு கார் வென்ற பிரபாகரன்..
Palamedu Jallikattu : 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கு ஒரு கார் மற்றும் பைக் பரிசும், முதல் இடம்பிடித்த சிறந்த காளைக்கு ஒரு காரும் பரிசு வழங்கப்பட்டது

பிரபாகரன் பரிசு பெற்றபோது
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற்று முடிவடைந்தது. 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது முறையாக முதல் பரிசான காரை பெற்று பிரபாகரன் சாதனை
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டுப் போட்டி தை 2-ஆம் நாளான இன்று காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு, பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டி தொடங்கியவுடன், முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு, பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் காளைகளுக்கு சவால் விடுத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மாடுபிடி வீரர்களையும் துவம்சம் செய்த காளைகள் வெற்றிபெற்றது.

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி, 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2-ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும், குக்கர், எல்.இ.டி TV, , தங்கக்காசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோன்று போட்டியின்போது பணியில் இருந்து காவல்துறை டிஎஸ்பி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் இருவர் மற்றும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 11 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement