மேலும் அறிய
அதிமுகவில் இணைவது தொடர்பா எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை - ஓபிஎஸ்
யாரிடமும் என்னை அழைத்துக் கொண்டு போய் அவரிடமும் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதே கிடையாது - ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்
Source : whats app
”அண்ணன் ராஜன் செல்லப்பா இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லி இருக்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பெரியகுளத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
அ.தி.மு.கவில் இணைய வேண்டும் என்றால் ஆறு மாதம் அமைதியாக இருந்தால் பரிசீலனை செய்வோம் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்த கேள்விக்கு:
இந்த பிரச்னை யாரால் உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் நன்றாக தெரியும். மக்கள் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எந்த சூழலிலும் கட்சி பிரிந்து கிடக்கின்ற அ.தி.மு.க., புரட்சித்தலைவர் காலத்திலிருந்து அம்மா வளர்த்த சக்தி யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாறியுள்ள இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்திருக்கிறார் என்பதெல்லாம் எண்ணி தான் பிரிந்து கிடக்கின்ற அ.தி.மு.க.வை அனைவரும் இணைய வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். யாரிடமும் நான் என்னை அழைத்துக் கொண்டு போய் அவரிடமும் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதே கிடையாது. அண்ணன் ராஜன் செல்லப்பா இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எனக்காக சிபாரிசு செய்வதாக சொல்லி இருக்கிறார். எனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை. பிரிந்திருக்கிற அ.தி.மு.க., ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.கவை எதிர்க்கின்ற வல்லமை சக்தி இயற்கையில் உருவாகும் என்பதைதான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனே ஒழிய எங்களை எல்லாம் சிபாரிசு செய்யும் தோணியில் அவர் பேசி இருக்கிறார். யாரிடமும் நாங்கள் எங்களை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொன்னதில்லை சொல்லவும் மாட்டோம்.
ரவீந்திரநாத் யார் என்று எனக்குத் தெரியாது என ஆர்.பி.உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு:
அம்மாவிற்கு அடையாளம் தெரிந்தால்போதும் உதயகுமாருக்கு தெரிய தேவையில்லை. எப்படி சொல்வது என்று புரியவில்லை அவர் எப்படி வந்தார் என்பதெல்லாம் மதுரையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும். அம்மாவே உத்தரவு போட்டதற்கு பின்னால் யார் சிபாரிசும் தேவையில்லை. இனிமேல் உதயகுமார் எங்களை பற்றி பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.
மும்மொழிக்கொள்கை குறித்த கேள்விக்கு:
பேரறிஞர் அண்ணா இரு மொழி கொள்கைதான் எங்கள் உயிர் மூச்சு என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். புரட்சிக் கலைஞர் காலத்திலும் இரு மொழி கொள்கைதான் தலையாய கொள்கை என்றும், புரட்சித்தலைவி அம்மாவும் சட்டமன்றத்தில் அறிவித்து தீர்மானமாக நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்கள். நான் முதல்வராக இருந்த போதும் மும்மொழிக் கொள்கை பற்றி அப்போது இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் சொன்ன போது நான் எழுந்து நின்று திராவிட இயக்கத்தின் தலையாக கொள்கை இரு மொழி கொள்கைதான் என்று பேசி இருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை எந்தவித உடன்பாடும் இல்லை உறுதியாக சொல்கிறோம். தமிழக மக்கள் இரு மொழி கொள்கைதான் ஒரு உயிர் மூச்சாக நினைத்துக் கொள்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு:
உறுதியாக சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இரட்டை இலையை எதிர்த்து நான் போட்டியிடும் சூழல் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும் என்னுடைய தொண்டர் பலத்தை நிரூபிப்பதற்காக நான் நிற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. என்னை தோற்கடிப்பதற்காக ஆறு பன்னீர் செல்வத்தை தேடி கண்டுபிடித்து அதற்கு கொண்டு வந்து நிறுத்தினார். என்ன ஆனது யார் டெபாசிட்டை இழந்தது. இரட்டை இலையும் டெபாசிட் இழந்தது. இவர் கொண்டு வந்து நிறுத்தியவர்களும் டெபாசிட் இழந்தனர். அதற்கு முழு காரண கர்த்தா உதயகுமார் என்பதை நான் சொல்லிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை அனைவரும் இணைய வேண்டும். புரட்சித்தலைவர் மறைவிற்குப் பிறகு இரண்டு அணிகளாக பிரிந்ததால் தோல்வி அடைந்தோம் அதற்கு மறுநாளே தலைவர்கள் சேர்வதற்கு முன்பாக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதை பார்த்துதான் தலைவர்களே சேர்ந்தார்கள். எனவே ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. எந்த தேர்தலிலும் இணையாமல் வெற்றி பெற முடியாது என்பது தான் மக்களின் தீர்ப்பாக இருந்திருக்கிறது ஒற்றை தலைமை வந்தால் உறுதியாக பழனிசாமி தலைமையில் முழு வெற்றியை பெறுவோம் என்று அனைத்து தேர்தலிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள் பிரிந்திருந்த காரணத்தினால் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion