மேலும் அறிய

தேனி: ஓணம் பண்டிகை; தமிழக, கேரள எல்லை பகுதிகளில் உச்சம் தொட்ட பூக்கள் விலை

ஓணம் பண்டிகை , முகூர்த்த திருவிழாக்கள் எதிரொலியாக தமிழக கேரள எல்லை மாவட்டமான தேனியில் எகிறிய பூக்கள் விலை. மல்லிகை பூ கிலோவிற்கு 4200 வரையில் விற்பனை.

தமிழக, கேரள எல்லை  இரு மாநிலத்தை இணைக்கும் எல்லை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம், சீலையம்பட்டி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் கேரள மாநிலத்தில் நாளை நடைபெறும் ஓணம் பண்டிகையையொட்டியும், தமிழகத்தில் தொடர் சுப முகூர்த்த தினங்கள்  நடைபெறுவதாலும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலையேற்றம் உச்சம் தொட்டுள்ளது.

தேனி: ஓணம் பண்டிகை;  தமிழக, கேரள எல்லை பகுதிகளில் உச்சம் தொட்ட பூக்கள் விலை

தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிபட்டி, பூமலைக்குண்டு, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் பூக்கள் கம்பம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். பரவலாக கேரள மாநிலத்திற்கு கம்பம் பகுதியில் இருந்தே பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் முதல் தேனி, கம்பம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.500க்கும் விற்பனையான நிலையில் தற்போது மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு 4,200 வரை விற்பனையாகி வருகிறது.

தேனி: ஓணம் பண்டிகை;  தமிழக, கேரள எல்லை பகுதிகளில் உச்சம் தொட்ட பூக்கள் விலை

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் கொண்டாடப்படுகிறது .

தேனி: ஓணம் பண்டிகை;  தமிழக, கேரள எல்லை பகுதிகளில் உச்சம் தொட்ட பூக்கள் விலை

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். இந்த ஓணம் பண்டிகை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதனால் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட தேவைப்படும் பெரும்பாலான பொருள்கள் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இருந்து வெள்ளம், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

தேனி: ஓணம் பண்டிகை;  தமிழக, கேரள எல்லை பகுதிகளில் உச்சம் தொட்ட பூக்கள் விலை

தற்போது தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் இருப்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு தமிழகத்தில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கம்பம் பள்ளத்தாக்கில் மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு ரூ.3,000 முதல் 4,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல செண்டு பூ, சம்பங்கி, ஜாதி பூ, முல்லைப் பூ போன்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு சில வாரமாக பூக்கள் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது திடீரென பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget