மேலும் அறிய

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் முதல் முறையாக ஜூன் மாதத்தில் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியிருக்கிறது.

தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை . இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்நிலையில் சென்ற ஜூன் முதல் வாரமான கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாயத்திற்கான சாகுபடி செய்தலுக்கு நாத்து நடுதல் போன்ற பணியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளது.

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

இதன் எதிரொலியாக அணையில் நீர்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் ஆனது 131 அடி அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1724 கன அடியாகவும் , அணையில் மொத்த நீர் இருப்பானது4931 கன அடியாகவும் இருந்து வருகிறது. அணையில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் லோயர்கேம்பில் உள்ள  நீர் மின் நிலையத்தில் முதல் முறையாக ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நீர்மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வசதியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்


முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

 நீரின் அளவைப்பொறுத்து மின் உற்பத்தி செய்யப்படும். வழக்கமாக  மே மாதத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி இருக்காது. ஆனால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீர் திறப்பானது 100 கன அடியாக குறைந்த போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னிலையில் தற்போது அணையிலிருந்து நீர் திறப்பானது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் 1,2 வது ஜெனரேட்டரில் தல 23 வீதம் 46 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.  மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும். 

தலைப்பு செய்திகள்

மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
பழனி நில முறைகேடு: வழக்கறிஞர் மரணத்தில் சந்தேகம்; சிபிஐக்கு மாற்றுமா உயர்நீதிமன்றம்?
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget