மேலும் அறிய

முல்லைப் பெரியாறு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! நீர்மட்டம் உயர்வு, வெள்ளம் அதிகரிக்கும் அபாயம்!

அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 136 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. அணையில் 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும் ரூல்கர் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும்.

தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் 152 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுனங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும்.


முல்லைப் பெரியாறு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! நீர்மட்டம் உயர்வு, வெள்ளம் அதிகரிக்கும் அபாயம்!

இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர்  தேக்கி வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக பெய்ய துவங்கும் காலகட்டத்திற்கு முன்பாகவே இந்த வருடம் முன்கூட்டியே பெய்யத் தொடங்கியது. இதனால்  நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு  பகுதியில் பெய்த கன மழையில் நீர்மட்டம் 135 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் நீர் திறக்கும் வாய்ப்பு உள்ளதால் தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து துவங்கும் முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


முல்லைப் பெரியாறு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! நீர்மட்டம் உயர்வு, வெள்ளம் அதிகரிக்கும் அபாயம்!

முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியை தாண்டியது. நேற்று காலை 133.65க்கு அடியாக இருந்த நீர்மட்டம் தற்போதைய நிலவரப்படி 135 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 1867 கன அடியாக இருந்தது நீர் இருப்பு 551 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாரின் 84.40 மில்லி மீட்டர், தேக்கடியில் 43.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.


முல்லைப் பெரியாறு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! நீர்மட்டம் உயர்வு, வெள்ளம் அதிகரிக்கும் அபாயம்!

இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 136 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. அணையில் 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும் ரூல்கர் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும். இந்நிலையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை தொடர்ந்து 136 அடி எட்டுவதற்குள் தமிழக பகுதிக்கு தற்போது திறக்கப்பட்டுள்ள நீரளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் லோயர் கேம்பில் துவங்கி வீரபாண்டி வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் ரூல்கர் விதிமுறைப்படி அணையில் தேக்க வேண்டிய நீர்மட்டம் அளவு 

ஜூன் மாதம் 30 வரை 136 அடி, ஜூலை 31 வரை 137 அடி, ஆகஸ்ட் 31 வரை 139.8 அடி, செப்டம்பர் 30 வரை 140 அடி, அக்டோபர் 31 வரை 138 அடி, நவம்பர் 30 வரை 142 அடி, டிசம்பர் 1 முதல் மே 31 வரை 142 அடி.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget