மேலும் அறிய

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் - கேரள தரப்பில் மனு

முல்லை பெரியாறு அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. ஆகையால்  முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டியாக வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு மீண்டும் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் - கேரள தரப்பில் மனு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் வலுவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. ஆனால் கேரளா அரசுகள் காலந்தோறும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை இடிந்துவிடும், முல்லைப் பெரியாறு அணையால் கேரளா அழிந்துவிடும், முல்லைபெரியாற்றின் குறுக்கே கேரளாவே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்திலும் இதே கோரிக்கையை கேரளா அரசு முன்வைத்து வருகிறது. ஆனாலும் உச்சநீதிமன்றம், எத்தனையோ குழுக்கள் அமைத்து ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது. அத்தனை குழுக்களுமே முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்கின்றன. இந்த ஒரு நூற்றாண்டில் எத்தனையோ நிலநடுக்கம், புயல், மழை வந்த போதும் அவற்றை எதிர்கொள்ளக் கூடியதாக வலுவான நிலையில்தான் தற்பொழுது வரை முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. மேலும், இதன் பின்னணியில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மேற்பார்வைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் - கேரள தரப்பில் மனு

அதிலும், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கேரள மாநில அரசு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பாணி வேடத்தில் நடித்த கமல்ஹாசன் சந்தைக்குப் போகனும்.. ஆத்தா வையும் என்கிற வசனத்தை திரும்ப திரும்ப உச்சரிப்பார். அதேபோலதான் கேரளாவும்  முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் எந்தவொரு செயலும் கேரளாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிலர் தேவையற்ற பிரச்சாரம் செய்து வருவதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையே நீண்டகால பிரச்சனை இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதி கேரளாவிற்குள் இருந்தாலும், அதன் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் தண்ணீர் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களின் உயிர்நாடி. 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அணை பாதுகாப்பானது என்றும், ஆனால் அணையின் நீர்த்தேக்கத்தில் நீர் மட்டத்தை 142 அடியாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியது. பின்னர் அணையை நிர்வகிக்க மேற்பார்வைக் குழுவை அமைத்தது.முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள அணையை வலுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget