மேலும் அறிய

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு

மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவராக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல் ராஜனை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பழனிவேல் தியாகராஜனின் தாயாரை தேர்வு செய்து அரசாணை வெளியீடு - தலைவர் தேர்வு நடைபெறுவதற்காக கால அவகாசம் முடிந்த்தாக கூறி குழுத்தலைவரை தேர்வு செய்து அறிவித்த அரசு.
 
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகளாக கருமுத்துகண்ணன் பதவி வகித்தார் . 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்திவந்தார். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவராக பதவியில் இருந்தபோது கருத்துமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே-23 ஆம் தேதி காலாமானர். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் கோவிலின் இணை ஆணையரே அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பில் இருந்துவந்தார்.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசகையில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபரான PKM செல்லையா, திருமதி.ருக்மணி பழனிவேல்ராஜன், அரசரடி பகுதியை சேர்ந்த திருமதி.மீனா அன்புநிதி, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர்.சீனிவாசன், மதுரை காந்திநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்த அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரைவில் அறங்காவலர்கள் குழு தலைவரை தேர்வு செய்வார்கள். இவர்களின் 2 ஆண்டுகள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஒரு உறுப்பினர், மகளிர் ஒரு உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் 5 அறங்காவலர்கள் உறுப்பினர்களை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 5 உறுப்பினர்களும் கோவில் அலுவலகத்தில் 5 பேரும் உறுதிமொழி ஏற்று பின்னர் கையெழுத்திட்டு பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற உறுப்பினர்கள் ஒரு மாத காலத்திற்குள் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டு அறங்காவல் குழு தலைவர் தேர்வு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர்  பிடிஆர் தாயார் தேர்வு
 
இந்நிலையில் குழுத்தலைவருக்கான தேர்வு தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் தொடங்காத நிலையில் குழுத்தலைவர் தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அறங்காவலர்குழு தலைவராக 5பேரில் யாரேனும் ஒருவரை  இந்து அறநிலையத்துறை சட்டப்படி அரசே தேர்வு செய்வதற்காக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில்  மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவராக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜனை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Swift vs Old: மாருதியின் புதிய ஸ்விஃப்டிற்கும், பழைய ஸ்விஃப்ட் மாடலுக்கும் என்ன வித்தியாசம்? - மொத்த லிஸ்ட் இதோ..!
New Swift vs Old: மாருதியின் புதிய ஸ்விஃப்டிற்கும், பழைய ஸ்விஃப்ட் மாடலுக்கும் என்ன வித்தியாசம்? - மொத்த லிஸ்ட் இதோ..!
Breaking Tamil LIVE: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் கருத்து!
யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் கருத்து!
TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு கோடை மழை இருக்கும்.. எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 7 நாட்களுக்கு கோடை மழை இருக்கும்.. எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
RCB vs PBKS: செய் அல்லது செத்துமடி போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு.. இன்று தோற்கும் அணி வெளியே..? 
செய் அல்லது செத்துமடி போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு.. இன்று தோற்கும் அணி வெளியே..? 
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul gandhi vs Modi : ’’பயந்துட்டீங்களா மோடிஜி?’’ தெறிக்கவிட்ட ராகுல்! சரவெடி பேச்சுThadi Balaji meets Chinnadurai : சாதித்து காட்டிய சின்னதுரை.. ஓடி வந்த தாடி பாலாஜிCow Baby Shower : ’’எங்க வீட்டு மகாலட்சுமி’’பசுவுக்கு வளைகாப்பு!அசத்திய தென்காசி தம்பதிRahul gandhi vs Modi : ’’முன் அனுபவம் உள்ளதா?’’அம்பானி அதானியுடன் டீல்?மோடிக்கு ராகுல் பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Swift vs Old: மாருதியின் புதிய ஸ்விஃப்டிற்கும், பழைய ஸ்விஃப்ட் மாடலுக்கும் என்ன வித்தியாசம்? - மொத்த லிஸ்ட் இதோ..!
New Swift vs Old: மாருதியின் புதிய ஸ்விஃப்டிற்கும், பழைய ஸ்விஃப்ட் மாடலுக்கும் என்ன வித்தியாசம்? - மொத்த லிஸ்ட் இதோ..!
Breaking Tamil LIVE: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் கருத்து!
யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது - சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் கருத்து!
TN Weather Update: அடுத்த 7 நாட்களுக்கு கோடை மழை இருக்கும்.. எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 7 நாட்களுக்கு கோடை மழை இருக்கும்.. எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
RCB vs PBKS: செய் அல்லது செத்துமடி போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு.. இன்று தோற்கும் அணி வெளியே..? 
செய் அல்லது செத்துமடி போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு.. இன்று தோற்கும் அணி வெளியே..? 
Crime: காற்றுக்காக கதவை திறந்து உறங்கிய இளம் ஆசிரியை.. பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி..
காற்றுக்காக கதவை திறந்து உறங்கிய இளம் ஆசிரியை.. பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி..
Swift 2024 Launch: தாறுமாறாக களமிறங்கிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எல்லாமே புதுசு, 6 ஏர் பேக்குகள், விலை எவ்வளவு தெரியுமா?
Swift 2024 Launch: தாறுமாறாக களமிறங்கிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எல்லாமே புதுசு, 6 ஏர் பேக்குகள், விலை எவ்வளவு தெரியுமா?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; இணையம் இல்லாமலும் பார்க்கலாம்- எப்படி?
TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; இணையம் இல்லாமலும் பார்க்கலாம்- எப்படி?
கடன் தொல்லையால் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை - நாட்றம்பள்ளி அருகே சோகம்
கடன் தொல்லையால் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை - நாட்றம்பள்ளி அருகே சோகம்
Embed widget