அமைச்சர் அன்பில் மகேஷ்: மும்மொழி கொள்கை சர்ச்சை! மாணவர் நலனில் உறுதியான முடிவு எடுப்போம்!
உலகம் முழுவதும் மொழிபெயர்க்க ஒரு செல்போன் போதும் மூன்றாவது மொழி வேண்டாம்- தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பள்ளி கல்வி துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அளித்த பேட்டியில், ஆர் டி என்பது ஒரு ஆக்ட். சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு கொண்டு வந்தது தான் ஆர் டி. சாதாரண குடும்பத்தில் உள்ள பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படிப்பதற்காக 25% இடம் கொடுக்க வேண்டும் எனக்கு கொண்டு வரப்பட்ட ஆக்ட் தான். அதில் யாரும் தலையிட முடியாது. ஆண்டுதோறும் அரசு வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறது.

இவர்கள் செய்ததை பார்த்தால் சுப்ரீம் கோர்ட்டையே, நீங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்று சொல்வது மாதிரியான ஒரு அர்த்தமாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் நமது மாணவ செல்வங்கள் நலன் கருதி ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள். அரசியல் பார்க்காமல் மாணவர்களின் நலனை மட்டும் பார்க்க வேண்டும். வருடத்திற்கு இதுசார்ந்து ஒரு லட்சம் பிள்ளைகள் படிக்கின்றனர். இவர்கள் பண்ணுகிற காரியத்தை பார்த்தால் போர்ட்டல் கூட ஓபன் பண்ண முடியாத சொல்லை உருவாகியுள்ளது. அப்படி ஆகிவிடக்கூடாது என எங்கள் செயலர் அவர்கள் செயலர் இடத்தில் பேசியிருக்கிறார்கள் கண்டிப்பாக நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்ன்கிறேன். மும்மொழி கொள்கை என்பது நமக்குத் தேவையில்லாதது. திமுகவின் நிறுவனத் தலைவர் அண்ணா அன்றைய இரு மொழிக் கொள்கை போதுமானது என்று சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் இரண்டு மொழியை வைத்து சுற்றி வருகிறார்கள் இதுவே போதுமானது என்று சொன்னால் மூன்றாவது மொழி கற்றுக் கொள்வது தவறு கிடையாது என்கின்றனர்.

அங்கீகாரம் பெற்ற 22 மொழிகளில் கற்றுக் கொள்ளலாம் என்று தான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் கட்டாயப்படுத்த கூடாது. தேர்வில் அனைத்து மொழிகளிலும் தேர்ச்சி பெற்று மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பை தான் தொடர வேண்டும். ஆகவே திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். எங்களுக்கு தேவை என்றால் பார்த்துக் கொள்கிறோம். அறிவு தான் முக்கியம்.ஒரு செல்போன் போதும் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த மொழியை கூகுளில் மொழிபெயர்த்து தெரிந்து கொள்ளலாம் அது போதுமானது தான். கல்வி அறிவு என்று அதை திணிக்க பார்க்கிறீர்கள்.

எங்களுக்கு தமிழ் ஆங்கிலம் போதும் உலகம் முழுவதும் நான் தமிழன் என்று சொல்வதற்கு என் தாய்மொழி தமிழ் இருக்கிறது. உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் இருக்கிறது என நாங்கள் சொல்கிறோம். ஆனால், அதையும் கேட்காமல் மும்மொழிப் கொள்கைதான் எனக்கு கூறி வருகின்றார். மும்மொழி என்றாலே மூன்றாவது மொழியாக ஹிந்திக்கு தான் முன்னுரிமை இருக்கும். சித்தி வந்து விட்டால் சமஸ்கிருதம் சேர்ந்து வந்துவிடும் அப்படி வந்து விட்டால் பிற்போக்கு சிந்தனைகள் வந்துவிடும். புராண கதைகளை எடுத்துக்காட்டாக கூறி பிள்ளைகளை அறிவியல் சார்ந்து சிந்திக்கவிடாமல் அறிவைமழுங்க்க செய்வார்கள் என நாங்கள் அதை எதிர்க்கிறோம் என்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐபி செந்தில்குமார் காந்தி ராஜன் கல்வித்துறை அதிகாரிகள் மாணவ மாணவியர் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





















