மேலும் அறிய

Megamalai : சீதோஷ்ண நிலையால் மேகமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான மேகமலையில் சீதோஷ்ண நிலையால், அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

உயரமான மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பள்ளத்தாக்குப் பகுதி. ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். மேகமலை பகுதிகளில் முழுவதும் காப்பி, தேயிலை போன்றவைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளதால், கண்களை கவரும் தேயிலைத் தோட்டங்களும், இங்கு எப்போதும் குளுமையான சூழலும் இருக்கும்.

Megamalai : சீதோஷ்ண நிலையால் மேகமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு அழகிய நில அமைப்பை கொண்ட இடம். மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.

சின்னமனூர் அருகே தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைவழிச்சாலை துவங்கும். மேகமலை ஒரு பாதுகாகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில்  நமது விபரங்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. மேகமலை செல்வோர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Megamalai : சீதோஷ்ண நிலையால் மேகமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் தேர்ந்தெடுப்பது மேகமலை தான். சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மேகமலையில் தற்போது அதிக அளவு பனிமூட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. தற்போது தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சின்னமனுார் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, மணலாறு, அப்பர் மணலாறு மற்றும் இரவங்கலாறு மலைக்கிராமங்களில் சில மாதங்களாகவே உறைபனி மற்றும் கடும் குளிர் நிலவுகிறது.

மேகமலையில் கடும் குளிரும், மழையும் பெய்து வருவதாலும், அட்டை பூச்சிகளுக்கு மத்தியிலும், எந்த நேரமும் யானைகள் ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்திலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும் மேக மலைப்பகுதியில் அவ்வப்போது வெயிலும் குளிர்ச்சியான காற்றும் நிலவி வருவதால், வானிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் மேகமலை மக்கள். இரவு வேளைகளில் கடுமையான உறைபனி நிலவுவதால் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர் அப்பகுதி மக்கள். கடும் பனிமூட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குறைந்ததாக மேகமலை பகுதி மக்கள் கூறினர். பனிமூட்டம் சீரான பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் மேகமடை பகுதிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறினர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget