மேலும் அறிய
Advertisement
Tamil news | நெல்லை ஆட்சியருக்கு விருது- போலி சாவி தயாரித்து திருட்டு - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் சங்கர் இருவரும் சேர்ந்து போலியாக சாவி தயாரித்து 5 லட்சம் திருடிய நிலையில் போலீசார் கைது
1. கடந்த வருடம் நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், GIS தொழில்நுட்ப உதவியுடன் மாவட்டத்தில் தேர்தலை நல்ல முறையில் நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு விருது அறிவித்துள்ளது.
2. நெல்லையில் மாஸ்க் அணியாமல் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து போலீசார் அபராதம் வசூலித்தனர்.
]
3. தேனி மாவட்டம் தேவானம்பட்டி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 9 நபர்களை காவல் துறையினர் கைது.
4. முழு ஊரங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
6.ராமநாதபுரம் பரமக்குடி அரசு ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
7. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி 28, 29ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு
8. சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் அண்மையில் முத்தூர் வாணியங்குடி பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்கள் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. அப்போது கொல்லங்குடி காளிராசா உள்ளிட்ட தொல்லியல் ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.
9. மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி பகுதியில் பெண் காவலர் கலாவதி பணியின் போது மயக்கம்போட்டு விழுந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
10. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் பயன்கள் நிறைந்த பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
11. மதுரை துரைசாமி நகரில் குருசாமி என்பவர் நடத்தி வந்த தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் சங்கர் இருவரும் சேர்ந்து போலியாக சாவி தயாரித்து 5 லட்சம் திருடிய நிலையில் போலீசார் கைது செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion