மேலும் அறிய

SIR- நடவடிக்கையால் எங்கள் குடும்பத்தை பிரித்துவிட்டார்கள்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புலம்பல் !

Madurai ; கை தட்டுனாதான் ”Extra பிரியாணி” - அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலகல !

ஏப்பா சுடச்சுட பிரியாணி, புரோட்டா, சுக்காக, முட்டை எல்லாம் செஞ்சு வச்சுருக்கு, யாரும் சாப்பிடாம  போயிறாதீங்கப்பா மிச்சமாகி வீணாகிடும் - செல்லூர் ராஜூ தொண்டர்களிடம் கலகல.
 
தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து
 
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில்  புதிய வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்  முன்னாள் அமைச்சரும் செல்லூர் கே.ராஜூ  தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டன் பிரியாணி, புரோட்டா, சுக்காக, முட்டை, என கமகம விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
 
திமுக - அதிமுக இடையே தான் போட்டி.
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகள் மத்தியில்...,” சூப்பர் ஸ்டார் சொல்வது போல் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் அதேபோல் தான் எடப்பாடி பழனிச்சாமியும். கை தட்ட மாட்டீங்களா? பிரியாணி எல்லாருக்கும் இருக்கு.... திமுகவை அகற்ற வேண்டும் என்றால் ஒத்த கருத்துடன் இருப்பவர்கள் யார் என்றாலும் வரலாம் என புரட்சித்தலைவர் சொன்னார். இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறை சுட்டு கொண்டே இருக்கிறார்கள்.. வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.. சென்சார் போர்ட் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.. எத்தனை கூட்டணி சேர்ந்தாலும், எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், திமுக - அதிமுக இடையே தான் போட்டி. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். நாளைக்கு ஸ்டாலின் அல்ல உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு. கட்சி ஆரம்பித்த சினிமா நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆரின் புகழைதான் பாடுகிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் என்றைக்காவது கலைஞர் ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லியுள்ளாரா? அவரே என் பெரியப்பா எம்.ஜி.ஆர் என்று தான் சொல்கிறார்.
 
குடும்ப ஓட்டு பிரிஞ்சு கிடக்கு
 
அதிமுகவில் இருந்து யார் விலகினாலும், எந்த ஒரு இழப்பும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் எத்தனையோ பேர் விலகினாலும் அதை பற்றி கவலைப்படாமல் தொண்டரை நம்பி தான் இருந்தார்கள். திமுக நான்கரை ஆண்டுகளாக மதுரைக்கு என்ன செய்தது.. எதுவும் செய்யவில்லை.. இதை சொல்லியே நாம் ஓட்டு வாங்கிவிடலாம்.. மதுரை மாநகராட்சி ஊழல் ஒன்று போதாதா மாநகரின் நான்கு தொகுதியை வெற்றி பெற.. மூர்த்தி அல்ல மும்மூர்த்தி வந்தாலும் மதுரை மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். விடுபட்டவர்களை வாக்காளராக சேர்க்க வேண்டும் இதை செய்தால் நூற்றுக்கு நூறு சதவீதம் மதுரை நான்கு தொகுதிகளில் யாரை நிறுத்தினாலும் அதிமுக வெற்றி பெறும்.. எஸ்.ஐ.ஆரில் எங்களுடைய குடும்ப ஓட்டையே பிரிச்சுட்டாங்க.. எங்கள்  குடும்பத்தையே பிரிச்சுட்டாங்க, வேற வேற நம்பரில் ஓட்டு பிரிஞ்சு கிடக்கு. கலெக்டரிடம் குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லது என சொன்னேன்” என்றார்.                                                                                                   

தலைப்பு செய்திகள்

பிரதமரின் தேசிய அப்ரண்டிஸ் முகாம்: விருதுநகரில் அரசு வேலைக்கு முதல் படி!
பிரதமரின் தேசிய அப்ரண்டிஸ் முகாம்: விருதுநகரில் அரசு வேலைக்கு முதல் படி!
பழனி நில மோசடி: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி! 5 ஆண்டு போலி பதிவுகளுக்கு விசாரணை !
பழனி நில மோசடி: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி.. 5 ஆண்டு போலி பதிவுகளுக்கு விசாரணை !
"திமுக தமிழ்நாட்டு மக்களுக்கு மொட்டை போட்டுவிட்டது!" - மதுரை எம்எல்ஏ முஸ்தபா ஆவேசம் !
பழனி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தம்: பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்!
பழனி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தம்: பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget