மேலும் அறிய

பிரபல ரவுடி வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

"வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் உள்ளன. திண்டுக்கல் சிறையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த ரவுடி வெள்ளைக்காளி @ காளிமுத்து. இவரது மனைவி திவ்யா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "என் சகோதரர் சின்னமுனுசு கடந்த 2004-ல் திமுகவை சேர்ந்த வி.கே.குருசாமி ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி இரு குடும்பங்களுக்கிடையே நடந்த மோதல்கள் தொடர்பாக மதுரை காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பல வழக்குகளில் உள்ள என் கணவர் வெள்ளைக்காளியை 2016-ல் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரது இடது கால் முட்டியை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர். இதன் பின் அவர் ஜாமீனில் வந்தார். 2020-ல் குற்றாலத்தில் மீண்டும் என் கணவரை கைது செய்தனர். அப்போது வலதுகால் கணுக்காலை அடித்து உடைத்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருச்சி சிறையில் என் கணவர் உள்ளார்.
 
அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இருப்பினும் வழக்கு விசாரணைக்காக அவரை மதுரையைச் சுற்றியுள்ள நீதிமன்றங்களுக்கு போலீஸார் அடிக்கடி அழைத்து வருகின்றனர். என் கணவரை, ஒன்றரை வயது மகளுடன் திருச்சி சிறைக்கு நேரில் சென்றும், மதுரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும்போதும் நேரில் சென்று சந்திப்பதிலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறேன். எனவே, வெள்ளைக்காளியை திண்டுக்கல் சிறைக்கு மாற்ற வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகளும், கஞ்சா வழக்குகளும் உள்ளன. திண்டுக்கல் சிறையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் திவ்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
மணப்பாறை நகராட்சியின் முதல் கூட்டத்தை அதிமுக சேர்மேன் சுதா தலைமையில் நடத்த கோரிய வழக்கு - நகராட்சி ஆணையர் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவு 
 
அ.தி.மு.க.வைச் சேர்ந்த மணப்பாறை நகராட்சித் தலைவி சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், போதிய கவுன்சிலர்கள் பங்கேற்காததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, இதுவரை நடக்கவில்லை. இதனால், நகராட்சி நிர்வாகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க கூடாது என்றும், என் தலைமையில் நகராட்சியின் முதல் கூட்டத்தை அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுதாரரின் கோரிக்கையை நகராட்சி கமிஷனர் 4 வாரத்தில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget