மேலும் அறிய
Advertisement
மதுரை ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் எந்தளவில் உள்ளன - தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
ரயில் பாதைகளுக்கு மேற்புறம் கட்டப்பட இருக்கும் பயணிகள் வசதி மையத்திற்கான அடித்தளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மதுரை ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
மதுரை ரயில் நிலையத்தின் தேவை
மதுரை மாநகராட்சி பகுதியில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையாம் ஆகிய பேருந்து நிலையங்கள் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது. அதே போல் மதுரை ரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனாலும் இங்கு சில வசதிகள் போதுமான அளவில் இல்லமால் இருந்தது. இதன் கோரிக்கையை சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எடுத்து வைத்தனர்.
மறு சீரமைப்பு பணி
இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு செய்தார். மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய முனையை கட்டிடம், பல்லடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம், உப மின் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேற்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ரயில் பாதைகளுக்கு மேற்புறம் கட்டப்பட இருக்கும் பயணிகள் வசதி மையத்திற்கான அடித்தளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பார்சல் போக்குவரத்திற்காக கட்டப்படும் மேம்பாலம், நடை மேம்பால புனரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் பொது மேலாளருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கட்டுமானப் பிரிவு முதுநிலைப் பொறியாளர் நந்தகோபால் முதுநிலைக்கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய் வழங்கக் கோரி உசிலம்பட்டியில் சாலை மறியல்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PM Modi: ஏழாவது முறையாக ஐக்கிய அமீரக எமிரேட்ஸ்க்கு பிரதமர் மோடி பயணம்; நாட்டு மக்களுக்கு சென்னது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion