மேலும் அறிய

மதுரை ரயில்வே கோட்ட மொத்த வருமானம் ரூபாய் 1408 கோடியாக உயர்வு !

மதுரை கோட்டத்தில் பயணிகள் பயணச் சீட்டு விற்பனை வருமானம்  அதிகபட்சமாக ரூபாய் 886.32 கோடியை தொட்டு உள்ளது. 

கடந்த ஆண்டு ரூபாய் 4.05  கோடியாக இருந்த உணவுக் கடைகள் வாடகை தற்போது 95.70 சதவீதம் உயர்ந்து ரூபாய் 7.92 கோடி ஆகியுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட வருமானம் 1408.69 கோடி ஈட்டியுள்ளது. 
 
மதுரை ரயில்வே கோட்டம், கடந்த 2025 - 26 நிதி ஆண்டில் மொத்த வருமானமாக ரூபாய் 1408.69 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டு வருமானமாக ரூபாய் 1245 கோடியை காட்டிலும் 13 சதவீதம் அதிகம். மதுரை கோட்டத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த  வருமான இலக்கான ரூபாய் 1340 கோடியை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். மதுரை கோட்டத்தில் பயணிகள் பயணச் சீட்டு விற்பனை வருமானம்  அதிகபட்சமாக ரூபாய் 886.32 கோடியை தொட்டு உள்ளது.  இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த  பயணிகள் வருமான இலக்கான ரூபாய் 863.90 கோடியை காட்டிலும் 3 சதவீதம் கூடுதல் ஆகும்.  கடந்த ஆண்டில் மதுரை கோட்டம் 4.89 கோடி பயணிகளை கையாண்டுள்ளது.
 
நிர்ணயித்த இலக்கான 4.62 கோடியை காட்டிலும் 6 சதவீதம் அதிகம்.
 
இது தெற்கு ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த இலக்கான 4.62 கோடியை காட்டிலும் 6 சதவீதம் அதிகம். அதேபோல சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 411 கோடியாக பதிவாகியுள்ளது. இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த  வருமான இலக்கான ரூபாய் 375.05 கோடியை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.149 மில்லியன் டன்னுக்கு அதிகமாக 3.572 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. முதன் முறையாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு மஞ்சள் பட்டாணி அனுப்பப்பட்டு அதன் மூலம் ரூபாய் 2.75 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதர பயணிகள் வருமானமான பார்சல், லக்கேஜ், நடைமேடை சீட்டு, பயண சீட்டு பரிசோதனை ஆகியவற்றின் வாயிலாக ரூபாய் 60.65 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
 
ரூபாய் 50.72 கோடி வருமானமும் கிடைத்துள்ளது.
 
பார்சல் போக்குவரத்து கணினி மயமாக்கப்பட்ட பிறகு எப்போதும் இல்லாத அளவாக தற்போது ரூபாய் 10.78 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 97 சதவீத ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட்டு பயண சீட்டு இல்லாதோர் மற்றும் ரயில்வே சட்ட விதிகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூபாய் 12.73 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவு வருமானங்களான உணவு கடைகள் வாடகை, வாகன காப்பகங்கள், ஓய்வறைகள் பராமரிப்பு, விளம்பரங்கள், கழிவு பொருட்கள் விற்பனை ஆகியவற்றின் வாயிலாக ரூபாய் 50.72 கோடி வருமானமும் கிடைத்துள்ளது.
 
உணவுக் கடைகள் வாடகை
 
கடந்த ஆண்டு ரூபாய் 4.05  கோடியாக இருந்த உணவுக் கடைகள் வாடகை தற்போது 95.70 சதவீதம் உயர்ந்து ரூபாய் 7.92 கோடி ஆகியுள்ளது. விளம்பரங்கள் வாயிலாக ரூபாய் 8.58 கோடியும்,  வாகன காப்பக பராமரிப்பு மூலமாக ரூபாய் 7.45 கோடியும், தங்கும் அறைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருக்கும் அறைகள், கழிப்பறைகள் பராமரிப்பு வாயிலாக ரூபாய் 1.79 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 23.60 கோடியாக இருந்த கழிவு பொருட்கள் விற்பனை வருமானம் 16 சதவீதம் அதிகரித்து ரூபாய் 23.60 கோடியாக உருவெடுத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget