மேலும் அறிய

Madurai ; பாஜக அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக இடதுசாரிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம் !

சாதிய ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல், தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக இடதுசாரி மற்றும் விசிக இணைந்து தொடர்ந்து போராடும் என்று பேசினார்கள்.

மத்திய பா.ஜ.க., அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மதுரையில் இடதுசாரிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன ஆர்ப்பாட்டம்
 
​ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மதுரையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று செல்லூர் - தாகூர் நகர் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே. கே. சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வடக்கு - 1ஆம் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி துவக்கி வைத்து பேசினார், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, விசிக நிர்வாகிகள் மணியரசு, வீரசிங்கம், மத்திய மாவட்டச் செயலாளர் ப. ரவிக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் மா. கணேசன், விசிக மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன் ஆகியோர் கண்டன உரையற்றினார்கள். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
 
வணிகச் சமையல் எரிவாயு விலை உயர்வு
 
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் வணிகச் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், ரயில்வே துறையில் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ (எம். எல்) சார்பில் சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் ; தேர்தல் முடிந்த பிறகும் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் மக்கள் நலப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் கட்சிகளாகும். போராட்டம் இவர்களின் நிலையான அரசியல் பாதை. அதை மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு இணைந்து செயல்பட்டது, மக்களுக்கான அரசியல் உறுதியை காட்டுகிறது. சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் மேலும் உயரும் அபாயம் உள்ளது. தனியார்மயம் அதிகரிப்பால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன குறிப்பாக ரயில்வே துறையில் இது ஆபத்தான வளர்ச்சியாகும். தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை சுரண்டுகின்றன. வேலைவாய்ப்பு குறைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலை அளிக்கும் செயலாக உள்ளது.
 
பெரும்பான்மை நிரூபணம் சட்டமன்றத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.
 
தமிழகத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் அது சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதும் கடந்த காலங்களில் அப்படித்தான் நாடாளுமன்றத்திலும் நடந்துள்ளது. பல மாநிலங்களில் சட்டமன்றத்திலும் நடந்துள்ளது இன்றைக்கு ஆளுநர் என்பவர் அவரும் நிரந்தர ஆளுநர் கிடையாது. அவர் உங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பட்டியலை கொடுங்கள் என்று கூறுகிறார். ஆளுநரின் செயல்பாடு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த அரசியல் சட்டத்திற்கு முரணாக உள்ளது. பெரும்பான்மை நிரூபணம் சட்டமன்றத்தில் மட்டுமே நடக்க வேண்டும். பாஜக இன்றைக்கு தமிழகத்தில் தாங்கள் போட்டியிட்ட 27 இடங்களில் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் தான் கொள்ளை புறம் வழியாக ஆளுநர் மூலமாக அரசியல் தலையீடு செய்கிறது. எனவே இதை இடதுசாரி கட்சிகள் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஜனநாயக பூர்வமாக கண்டித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது, தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சாதிய ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல், தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்கு எதிராக இடதுசாரி மற்றும் விசிக இணைந்து தொடர்ந்து போராடும் என்று பேசினார்கள்.
 

Advertisement

தலைப்பு செய்திகள்

Admk Ex Mla Govindasamy : தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
Admk MLA Case : விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Chennai Airport : ’58 நாள் குழந்தைக்காக அவசரமாக தரையிறங்கிய விமானம்’ சென்னையில் நடந்தது என்ன..?
’58 நாள் குழந்தைக்காக அவசரமாக தரையிறங்கிய விமானம்’ நடந்தது என்ன..?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
’’எங்கே போச்சு சிங்கப்பெண் படை? 6 மாத Trial முடியும்வரை எத்தன உயிரை இழக்கணும்?’’ அதிமுக விளாசல்
’’எங்கே போச்சு சிங்கப்பெண் படை? 6 மாத Trial முடியும்வரை எத்தன உயிரை இழக்கணும்?’’ அதிமுக விளாசல்
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
DMK Slams Rahul Gandhi : ‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ காலையிலேயே ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
Embed widget