மேலும் அறிய
Advertisement
Madurai Power Shutdown: மதுரை மாவட்ட மக்களே நாளை மின் தடை; எங்கெல்லாம் தெரியுமா?
Madurai Power Shutdown 12.11.24: மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (12.11.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
செய்திக் குறிப்பு மின் தடை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் மின் தடை செய்யப்படுகிறது.
மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள்
மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர், தேவி நகர், கிருஷ்ணா நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், அய்யனார் கோயில், சத்தியமூர்த்தி நகர், அருள் நகர், காயத்ரி தெரு, துரைச்சாமி நகர்.
அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி.
சமயநல்லுார், தேனுார், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சி யம், நகரி,திருவாலவாயநல்லுார், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்க்கரசி கல்லுாரி, பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாக்குடி.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion