(Source: ECI/ABP News/ABP Majha)
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
Donald Trump, Elon Musk Asset Value: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, எலான் மஸ்க்கின் சொத்தானது 26 பில்லியன் டாலர், மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, எலான் மஸ்க்கின் சொத்தானது 26 பில்லியன் டாலர், மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலானது, நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. தேர்தல் முடிவில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த தருணத்தில் பல கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் அறிக்கையின்படி கடந்த ஜூன் 2024 நிலவரப்படி, டொனால்டு டிரம்ப்பின் சொத்து மதிப்பு 7.7 பில்லியன் அமெரிக்க டாலராக ( இந்திய ரூபாய் மதிப்பில் 64, 973 கோடி ரூபாய் ) உள்ளது.
உயர்ந்த சொத்து மதிப்பு:
இந்த தருணத்தில் சில கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பானது, அதிக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக எலான் மஸ்க், அமேசான் ஜெஃப் பெசோஸ், ஆரக்கிள் லாரி எலிசன் மற்றும் வாரன் பஃபெட் போன்ற முக்கிய நபர்கள் அடங்குவர். இவர்களின் ஒவ்வொருவரும் தேர்தலுக்குப் பிந்தைய பங்குச் சந்தை நம்பிக்கை அதிகரித்ததால் கணிசமான நிதி ஆதாயங்களை அடைந்துள்ளனர்.
Also Read: Robert Kennedy: டிரெண்டிங்கில் டிரம்ப் இல்லை; கமலாவும் இல்லை: ராபர்ட்தான் டாப்பு ; யார் இவர்?
அதிகரித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு:
உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், முக்கிய டிரம்ப் ஆதரவாளருமான ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ட்ரம்பின் பிரச்சாரத்திற்கு சுமார் 119 மில்லியன் டாலர் பங்களித்ததாகவும் கூறப்படுகிறது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளதாவது, அவரது ஆதரவும் அதைத் தொடர்ந்து வந்த தேர்தல் முடிவும் மஸ்க்கின் நிகர மதிப்பில் குறிப்பிடத்தக்க 26.5 பில்லியன் டாலர் உயர்வுக்கு வழிவகுத்தது. இப்போது, இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 290 பில்லியன் டாலராகும். ( இந்திய ரூபாய் மதிப்பில் 24,47,030 கோடி ரூபாய் )
மற்ற பில்லியனர்களும் குறிப்பிடத்தக்க லாபங்களை அடைந்துள்ளனர். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் நிகர சொத்து மதிப்பானது 7.14 பில்லியன் டாலர் அதிகரித்து 228 பில்லியன் டாலராக உள்ளது.
ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசனின் சொத்து மதிப்பு 9.88 பில்லியன் டாலர் அதிகரித்து, 193 பில்லியன் டாலரை எட்டியது, அதே நேரத்தில் வாரன் பஃபெட்டின் சொத்து $7.58 பில்லியன் அதிகரித்து, இப்போது $148 பில்லியனாக உள்ளது.
Video: அமெரிக்க தேர்தல் முடிவை அன்றே கணித்த நீர் யானை: வைரலாகும் வீடியோ