மேலும் அறிய
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அனைத்து விதமான சேவைகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்
இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக செப் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது என மதுரை மண்டல அதிகாரி கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்கள்
வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்களாகும். பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். விசா உங்கள் வருகையின் நோக்கம் மற்றும் கால அளவைக் குறிக்கிறது. இந்த ஆவணங்கள் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்கின்றன. இந்நிலையில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பாஸ்போர்ட் இணையதளம் செயல்படாது என மதுரை மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம்
”இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை) இரவு 8 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது” என மதுரை மண்டல பாஸ்போரட் அதிகாரி தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்தலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement