NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024 Revised: பொதுப் பிரிவினருக்கு 28.308 பர்சண்டைலாகவும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு 18.308 பர்சண்டைலாகவும் கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது.
நீட் முதுகலை பல் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு கட் ஆஃப் பர்சண்டைல் குறைக்கப்பட்டிருப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எவ்வளவு? காரணம் என்ன?
இந்த கட் ஆஃப் பொதுப்பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி என எல்லாப் பிரிவினருக்கும் மொத்தமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கட் ஆஃப் பர்சண்டைல் பொதுப் பிரிவினருக்கு 50 ஆகவும் எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினருக்கு 40 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கு 28.308 பர்சண்டைலாகவும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு 18.308 பர்சண்டைலாகவும் கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது. பொதுவான மாற்றுத் திறனாளிகளுக்கு 23.308 பர்சண்டைலாகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம், ஏராளமான மாணவர்கள், முதுகலை பல் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.
MDS 2024 Revised Cutoff Result https://t.co/fMfvRSbfDM #NEET #MDS #DentalPG #MDS2024 #MCC #NEETMDS #MCC pic.twitter.com/JwkevGaAEO
— NEET Predictor (@KumarMa70928441) September 18, 2024
முன்னதாக முதுகலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது கட் ஆஃப் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக் குழு, இந்த மாணவர்களுக்கான கலந்தாய்வுப் பணிகளை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைபேசி எண்: 011-45593000
கூடுதல் தகவல்களுக்கு: https://exam.natboard.edu.in/communication.php?page=main/
ஏற்கெனவே நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர, ஜீரோ பர்சண்டைல் இருந்தால் போதும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது சர்ச்சைகளைக் கிளப்பி இருந்தது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.