Tree planting: ஏப்ரல் ஃபூல் இல்ல ; ஏப்ரல் கூல் மதுரையில் தொடரும் இயற்கை முன்னெடுப்பு - இது புதுசா இருக்கு !
கல்லூரியில் 99-வகையான மரங்கள் உள்ளது. அதனை தவிர்த்து 22 புதிய நாட்டு வகை மரக்கன்றுகளை பசுமை நண்பர்கள் நட்டு வைத்தனர்.

ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏப்ரல் ஃபூல் இல்லை ஏப்ரல் கூலாக தான் இருக்க வேண்டும் என மரம் நடும் பணியை மதுரை பசுமை நண்பர்கள் குழு செய்து வருகிறது. கடந்த 2018 முதல் மதுரை மாவட்டம் முழுவதும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு கோடை வெயிலை கட்டிப் படுத்த வேண்டும் என்ற மிகப்பெரும் முயற்சியை செய்து வருகின்றனர்.
ஏப்ரல் ஃபூல் இல்ல ; ஏப்ரல் கூல் மதுரையில் தொடரும் இயற்கை முன்னெடுப்பு !
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று 2023 மரக்கன்றுகளை வழங்கி பசுமை நண்பர்கள் ஏப்ரல் கூல் நிகழ்சியை கொண்டாடினர். புவி வெப்பமாவதை தடுக்க முயற்சியாக 2018-ல் இருந்து இந்த நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.#Madurai pic.twitter.com/0tNpG2V27b— arunchinna (@arunreporter92) April 1, 2023

மரக்கன்றுகளை வாங்கிச் சென்ற மாணவர்களின் முழு விபரத்துடன், கன்று வளர்த்தெடுக்க கியூவார் கோடு முறையில் விபரம் சேகரிப்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏப்ரல் கூல் நிகழ்ச்சியில் மாணவர்கள் நாட்டு மரக்கன்றுகளை ஆர்வமாக வாங்கி சென்றனர்.#madurai @UpdatesMadurai @abpnadu @SRajaJourno pic.twitter.com/YfQHwkrfL3
— arunchinna (@arunreporter92) April 1, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

