மேலும் அறிய
Advertisement
Madurai GRT Hotel : புதிய GRT ஹோட்டல் திறப்பு, பலருக்கும் வேலைவாய்ப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..
GRT Hotel : தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரமான மதுரையில், ஜி.ஆர்.டி (GRT) குழுமம் தனது புதிய நட்சத்திர விடுதியை தொடங்கியுள்ளது.
ஜி.ஆர்.டி ஹோட்டல்
மதுரை வளமான கலாச்சாரம், பாரம்பரியம், புகழ்மிக்க கட்டிடக்கலை மற்றும் அதன் ஒவ்வொரு பகுதிகளுக்கும், வரலாற்றின் பின்னணியில் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மதுரையில், சுற்றுலாப்பயணிகள் தங்கள் தங்கும் அனுபவத்தை சிறப்பானதாகவும், என்றும் நினைவில் நிறுத்தும்படியும் செய்ய வசதியான, ஆடம்பரமான அறைகளை வழங்குகிறது ஜி.ஆர்.டி. குழுமத்தின் கிராண்ட் மதுரை. ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் குழுமத்தின் இந்த புதிய நட்சத்திர விடுதி, அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஏற்ப செழுமை மற்றும் வசதிக்கான உறுதியளிக்கிறது.
ஹோட்டல் வசதிகள்
மதுரை விமான நிலையத்திற்கு அருகில், வேலம்மாள் மருத்துவமனை மற்றும் ஐடா ஸ்கடர் கன்வென்ஷன் சென்டர் ஆகியவற்றின் பக்கத்தில் அமைந்துள்ளது, இந்த புதிய கிராண்ட் மதுரை விடுதி. அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், செயின்ட் மேரி கதீட்ரல் மற்றும் பல கலாச்சார பகுதிகளைக் காண இங்கிருந்து எளிதில் செல்ல முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த விடுதியின் பரந்த புல்வெளிகள், அரண்மனை போன்ற லாபி, 120 தலைசிறந்த அறைகள், சிறப்பு உணவகம், பானக்கூடம் மற்றும் ஸ்பா வசதிகள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கக்கூடியவை.
நவீனத்துவத்தை பறைசாற்றும் அறைகள், நகரத்தின் பரந்த காட்சிகளை வழங்குவதோடு, அமைதியான உட்புறங்கள், அதிநவீன மற்றும் தடையற்ற பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் அறையை தேர்வு செய்தாலும் அல்லது ஆடம்பர வகுப்பு அறைகளை தேர்வு செய்தாலும், உள்ளே நுழைந்தது முதல் விடைபெறும் வரை செயல்திறனும் நேர்த்தியும் மதுரை கிராண்ட் விடுதியில் உறுதி செய்யப்படும் என நிர்வாகம் வாக்குறுதி அளிக்கிறது.
சமையல் அறை
ஜி.ஆர்.டி 'கிராண்ட்' பிராண்டின் ' பஜார்' உலகளாவிய-சமையல் உணவகம், ஒவ்வொரு உணவிற்கும் பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்ட உணவுப் பிரியர்களுக்கான புகலிடமாகும். பிராண்ட் அம்பாசிடர் மற்றும் பிரபல சமையல் வல்லுநர் செஃப் தாமு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பஜார் இடத்தையும் கண்காணித்து வருகை தந்து விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறார். மதுரையின் முதல் கிளப்பான ஸ்டுடியோ 79 இல் விருந்தினர்கள் ரெட்ரோ ட்யூன்கள், தீம் காக்டெயில்கள் மற்றும் நவீன திருப்பங்களுடன் உள்ளூர் சுவைகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மறக்கமுடியாத இடமாக மாற்றுகிறது. GRT ஹோட்டல்களின் கிராண்ட் மதுரையில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல்துறை மற்றும் விசாலமான நிகழ்ச்சி பகுதிகள் உள்ளன, இதில் 1,000 விருந்தினர்கள் வரை பங்கேற்கும் வகையில் விசாலமாக அமைக்கபட்டுள்ளதால், சிறப்பு நிகழ்வுகள், முக்கியமான வணிகக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த ஏற்ற இடமாக உள்ளது. ஜி.ஆர்.டி குழுமம் எப்போதும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது, இது கிராண்ட் மதுரையில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் காணலாம். விருது பெற்ற போதி ஸ்பாவில் இருந்து உடலுக்கும் மனதுக்கும் பலவிதமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. வெளிப்புற நீச்சல் குளம், வாரத்தின் அனைத்து தினங்களிலும் எப்போதும் இயங்கும் உடற்பயிற்சி கூடம் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த அற்புதமான நகரம் வழங்கும் அனைத்தையும் நன்கு அறிந்த ஜி.ஆர்.டி குழு, மதுரையை சரியான வழியில் அனுபவிக்க வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டும். கொடைக்கானல் மற்றும் ராமேஸ்வரம் போன்ற அருகிலுள்ள இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பினாலும், பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல விரும்பினாலும், அல்லது மதுரையின் பாரம்பரிய கட்டிடக்கலை அதிசயங்களை கண்டுகளிக்க விரும்பினாலும், மதுரை கிராண்ட் குழு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும் என தெரிவித்தனர். கிராண்ட் மதுரை திறப்பு விழா குறித்து ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் தலைமை செயல் அதிகாரி விக்ரம் கோட்டா குறிப்பிடும்போது, செழுமையான கலாசார அலங்காரத்துடன் கூடிய மதுரை மாநகரம், தங்களின் அன்பான விருந்தோம்பலை வழங்குவதற்கு ஏற்ற இடம் என்றார்.
ஜி.ஆர்.டி ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது என்றும், 2025 ஆம் ஆண்டில் 25 கிளைகளைகளுடன் இயங்கும் என்றும் அவர் கூறினார். சென்னையில் அதன் முதன்மையான விடுதியுடன் மதுரை மற்றும் அதைத் தாண்டிய மக்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் நான்காவது ‘கிராண்ட்’ ஹோட்டல் இது என்றும், கிராண்ட் மதுரை ஜிஆர்டி ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் குழுமத்தின் 22வது மற்றும் மதுரையின் 2வது ஹோட்டலாகவும் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தருணத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தனர்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
மேலும் ஜி.ஆர்.டி., ஹோட்டல்ஸ் CEO விக்ரமன் கோட்டா மற்றும் வேலம்மாள் ஹோட்டல்ஸ் சி.ஏ.ஓ., மணிவண்ணன் தெரிவிக்கையில்..." மதுரையை சுற்றி ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி மற்றும் அழகர்கோயில், ராமேஸ்வரம் ராமநாத சாமி கோவில் என வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மேலும் புதிதாக உலகத் தரம்வாய்ந்த கிரிக்கெட் மைதானமும் தயாராகி வருகிறது. மதுரை கீழக்கரை பகுதியில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமையப்பெற்றுள்ளது. இதனால் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட வளர்ச்சியின் காரணமாகவுன் இந்த ஜி.ஆர்.டி., ஹோட்டல் அமைந்தது வரப்பிரசாதமாக மாறி, இந்த நிறுவனம் சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி., ஹோட்டல் இளங்கோ ராஜேந்திரன் மற்றும் அனு ஆப்ரஹாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion