(Source: ECI/ABP News/ABP Majha)
Madurai: காந்தி அரையாடை ஏற்ற இடத்தில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் மரியாதை
காந்திக்கு மாலை அணிவித்த பின் மாவட்ட ஆட்சியரிடம் விமான நிலையம் விரிவாக்க பாதை குறித்து கோரிக்கை வைத்த அமைச்சர் மூர்த்தி.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி பகுதியில் உள்ள காந்தி அரையாடை ஏற்ற இடத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தி விழா
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி பகுதியில் உள்ள காந்தியடிகள், அரை ஆடை ஏற்று இடத்தில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவசிலைக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் தினேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன் மற்றும் தளபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு அமைந்துள்ள காந்தி கிராஃப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மாற்றுப்பாதைகளை ஏற்பாடு செய்ய கோரிக்கை
இதனையடுத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்த, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு விற்பனையில் வைக்கப்பட்டுள்ள விற்பனை பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் காந்தி நினைவாலயத்தின் வெளியில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையம் விரிவாக்கத்தில் மதுரையில் இருந்து செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு செல்வதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை எளிமையான முறையில் செய்வதற்காக மாற்றுப்பாதைகளை ஏற்பாடு செய்வது குறித்து விமான நிலைய இயக்குனரிடம் பேசி உரிய முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு