மேலும் அறிய
Advertisement
மோசடி வழக்கில் சிக்கிய பாஜக மாவட்ட தலைவருக்கு முன் ஜாமீன்
நான் எந்த குற்றம் செய்யவில்லை. இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு உள்ளேன். அரசியல் உள்நோக்கம் காரணமாக இந்த வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கில், விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு. அதில், "பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவராக சுரேஷ் குமாரும். பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் கலையரசன் உள்ளார். எங்கள் இருவர் மீதும், விருதுநகர் சிவகாசி டவுன் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் பாண்டியன் SP அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவராகிய நானும், விருதுநகர் மாவட்டச் செயலாளருமான கலையரசனும் சேர்ந்து விருதுநகர் சிவகாசி டவுன் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக உள்ள பாண்டியன் என்பவரின் மகன்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் பெற்றுவேலையும் வாங்கி தரவில்லை இந்த சம்பவம் 2018ல் நடந்தது.
நான் எந்த குற்றம் செய்யவில்லை. இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு உள்ளேன். அரசியல் உள்நோக்கம் காரணமாக இந்த வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மனுதாரரின் அரசியலை விட்டு அப்புறப்படுத்த புனையபட்ட வழக்கு. எனவே, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் எனவே தனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion