மேலும் அறிய
Madurai Hc: "எனது கணவருக்கு 500 பெண்களுடன் தொடர்பு” - மனைவி குற்றச்சாட்டு
இந்த வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
![Madurai Hc: Madurai Hc Request to transfer the case of her husband's relationship with more than 500 women to CBCID - TNN Madurai Hc:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/455712fc8d20a7ee0c32174a499f7565_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
500க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை தனது மொபைலில் வைத்துள்ளதாகவும் பல பெண்களுடன் அநாகரிகமான உரையாடல் செய்ததாகவும் மனைவி குற்றச்சாட்டு. வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
வழக்கு விபரம்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், 'எனக்கு விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்தோம். இந்நிலையில் எனது கணவரின் தொலைபேசியை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன் சாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை தொலைபேசியில் வைத்துள்ளார்.
![Madurai Hc:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg)
ஆபாச படங்கள்
மேலும் கணவர் விவேக்ராஜ் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியரிடம் பேசி சுமார் 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துள்ளார். இதைப் பற்றி அவரது பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்றும் என்னை மிரட்டினர். மேலும் தான் இரண்டு மாத கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் தன்னை அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவில் கலைந்து விட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
![Madurai Hc:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/12/a179c9d2de4bd26932b7e9a64054100b_original.jpg)
அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
எனவே எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன்பு விசாரணை வந்தது. இந்த வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jallikattu 2024: தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் ஜோர்! அதிகாரிகள் ஆய்வு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை: இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு தலா 3 ஆயுள் தண்டனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion